கையில் 3 வயது குழந்தை.. திடீரென இளம்பெண் செய்த பகீர்.. அரண்டு போன தர்மபுரி கலெக்டர் ஆபிஸ்!
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 3 வயது பெண் குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தனது மாமியார் வரதட்சணை கொடுமை செய்து, தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முயல்வதாக இளம்பெண் குற்றம்சாட்டினார்.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்.இவரது மனைவி சத்யா. இவர்கள் இருவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

வரதட்சணை கொடுமை
வெங்கடேஷின் தாயார் முனியம்மாள் வரதட்சணை கேட்டு சத்யாவை கொடுமைப்படுத்தியதாகவும், கூடுதல் வரதட்சணை கொடுக்காவிட்டால் தன்னுடைய மகனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைப்பதாக மிரட்டியதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக சத்யா கடத்தூர், அரூர் காவல் நிலையங்களிலும் மற்றும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தற்கொலை முயற்சி
இதனை தொடர்ந்து வரதட்சணை கொடுமையை தாங்க முடியாத சத்யா, 3 வயது பெண் குழந்தையுடன் தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் முனியம்மாள், மகன் வெங்கடேசுக்கு வேறு ஒரு திருமணம் செய்ய முயன்று வருவதாக சத்யாவுக்கு அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதனால் மிகவும் மனவேதனை அடைந்த சத்யா, இன்று தனது 3 வயது பெண் குழந்தையுடன் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்றார். அலுவலகம் முன்பு சென்ற அவர், திடீரென குழந்தையுடன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திடீர் பரபரப்பு
கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக தீக்குளிக்க முயன்ற சத்யாவை காப்பற்றி, விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ''வரதட்சணைக்காக என்னை ஒதுக்கி வைத்து எனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணை மருமணம் செய்து வைக்க எனது மாமியார் முயன்று வருகிறார். எனவே எனது மாமியார், கணவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று சத்யா கோரிக்கை விடுத்தார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் மனு
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் நடைபெறுவது வழக்கம். கொரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் மாவட்ட கலெக்டரை நேரடியாக சந்தித்து மனு அளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது கோரிக்கை அடங்கிய மனுவை அங்குள்ள புகார் பெட்டியில் போட முடியும். எனவே ஒவ்வொரு திங்கட்கிழமையும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மனு அளிக்க வருகின்றனர்.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
அப்போது சிலர் தங்களது கோரிக்கைகள் தீர்வு காணப்படாமல், நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டு இருப்பதால் மனவேதனை அடைந்து போலீசாரின் பாதுகாப்பையும் மீறி தொடர்ந்து மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications