தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் சென்னை பெண்கள் போதையில் அநாகரீகம்! அதுவும் அர்த்த ராத்திரியில்! போலீசிடம் ரகளை
தர்மபுரி: தர்மபுரி பஸ் நிறுத்தத்தில் நேற்று முன் தினம் அதிகாலை சென்னையை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் மற்ற பயணிகளை முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரிடமும் அந்த பெண்கள் ரகளையில் ஈடுபட்டது அங்கு இருந்த பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தர்மபுரியில் இருந்து சென்னை, பெங்களூர், சேலம் என பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கபட்டு வருகின்றன. இரவு நேரத்தில் கூட பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். சென்னை, பெங்களூர், கோவை, சேலம் போன்ற நகரங்களுக்கு செல்ல இரவு நேரத்தில் கூட பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால், எப்போதும் பரபரப்பாக தர்மபுரி பேருந்து நிலையம் காட்சியளிக்கும்.

முகம் சுளிக்க வைத்த பெண்கள்
பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி போலீசாரும் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். பேருந்து நிலையம் வரும் பயணிகளை குறிவைத்து நடைபெறும் கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்தவும், போதையில் சில பயணிகள் அத்துமீறுவதை கண்காணித்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தர்மபுரி பேருந்து நிலையத்தில் சென்னையை சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் நடந்து கொண்ட விதம் சக பயணிகள் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. தர்மபுரி பேருந்து நிலையத்திற்கு வந்த இரண்டு பெண்கள் வாலிபர் ஒருவருடன் முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடந்து கொண்டனர்.
போதையில் ரகளை
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்த பயணிகள், பொது இடத்தில் இப்படியா நடந்து கொள்வது என கண்டித்தனர். இதனால், கோபம் அடைந்த அந்த இளம்பெண்கள், கண்டித்த பயணிகளை தரக்குறைவாக பேசினர். இதையடுத்து போலீசாருக்கு பயணிகள் சிலர் தகவல் தெரிவித்தனர். இதில், பேருந்து நிலையத்தில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடந்து கொண்ட பயணிகள் சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
அந்த பெண்கள் மதுபோதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. போலீசாரிடமும் அந்த பெண்கள் ரகளையில் ஈடுபட்டது அங்கு இருந்த பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. சிறிது நேரத்தில் அந்த பெண்கள் இருவரும் கிருஷ்ணகிரி செல்லும் பேருந்தில் ஏறி சென்றனர். தர்மபுரி பேருந்து நிலையத்தில் இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மசாஜ் பணிக்காக
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "சென்னையில் இருந்து தர்மபுரிக்கு மசாஜ் பணிக்காக இரண்டு இளம்பெண்களும் வந்து இருக்கிறார்கள். பணி முடிந்த பிறகு அதிகாலையில் பேருந்து நிலையத்திற்கு வந்த இரண்டு இளம்பெண்களும், பயணிகளை தரக்குறைவாக பேசியிருக்கிறார்கள். பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்ட பெண்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறினர்.
வைரலாகும் வீடியோ
இதற்கியையெ, தர்மபுரி பேருந்து நிலையத்தில் பெண்கள் பயணிகளிடம் வாக்கு வாதம் செய்து தரக்குறைவாக பேசும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இளம்பெண்களின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பெண்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீடியோவை பார்த்த மக்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
-
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications