1 ஏக்கர் 33 சென்ட்.. கட்டபொம்மன் பரம்பரையிலேயே "கை" வெச்சிட்டாங்களே.. திணறடித்த திண்டுக்கல் நிலமோசடி
திண்டுக்கல்: ஓட்டபிடாரம் அருகே கட்டபொம்மன் வாரிசுகளின் இடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டபொம்மன் வாரிசுகளிடமே நிலமோசடியா? என்று திண்டுக்கல் மாவட்டம் அதிர்ந்து காணப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஓட்டபிடாரம் அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளின் இடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக பிரமுகர் மீது குற்றஞ்சாட்டி கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
புகார் மனு: இது தாெடர்பாக தமிழர் முன்னேற்றக் கழகம் நிறுவனர் தலைவர் அர்ச்சுணன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: "வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட ஏக்கர் கணக்கான நிலத்தை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் பல பேருக்கு கிரயம் செய்து விற்றுள்ளார்.

இவர் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்தார். இதில், அண்ணாமலை (63) என்பவர் 1 ஏக்கர் 33 சென்ட் இடத்தை ரூ.8 லட்சத்திற்கு கிரையம் செய்துள்ளார். ஓட்டபிடாரம் வட்டாட்சியர் அலுவலகம் சென்று பட்டாவை மாற்றித் தாருங்கள் என கேட்டதற்கு, இது மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளுக்கு அரசால் வழங்கபட்டது. எனவே இதை வட்டாச்சியர் பட்டா மாற்ற முடியாது என்று கூறியுள்ளார்.
ஆளுங்கட்சிக்காரன்: அவர் சரவணகுமாரிடம் இது பற்றி கேட்டபோது, "நீ எங்கு வேணாலும் போ நான் ஆளுங்கட்சிகாரன் ஒன்னும் பண்ணமுடியாது" என கூறியுள்ளார். எனவே அண்ணாமலை இது சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் சுமார் 4 ஏக்கர் அளவிலான இடத்தை சுமார் 430 பேருக்கு கிரையம் செய்துள்ளார். அவர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர்.
ஆகவே மோசடி நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திரும்ப அளிக்கவும், இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபடுவதற்கு துணை போன அதிகாரிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிலமோசடி: நிலத்தை வாங்கியவர், சமீபத்தில் பட்டா மாறுதல் கேட்டு, தாலுகாஆபீசுக்கு சென்றபோதுதான், இப்படியொரு மோசடி குறித்து தெரியவந்துள்ளதாம்.. கட்டபொம்மன் வாரிசுகளிடமே மோசடி நடந்துள்ளதாக புகார் சென்றிருப்பது பரபரப்பை கூட்டிவருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications