Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல் பைபாஸில் காதலுடன் நின்ற 2 இளம் பெண்கள்.. நடுங்க வைத்த சம்பவத்தின் பின்னணியில் 4பேர்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கணவரை பிரிந்து வசித்து வரும் பெண் மற்றும் அவரது 17 வயது தங்கை ஆகியோரை 4 பேர் கும்பல் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

திண்டுக்கல் அருகே ஒரு கிராமத்தில் அக்காள் தங்கை உள்பட 3 மகள்கள் வசிக்கிறார்கள். இதில் மூத்த பெண்ணுக்கு 19 வயது ஆகிறது. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. எனினும் கணவரை பிரிந்து பெற்றோருடனே வாழ்ந்து வருகிறார்.

2 young women were raped in front of their lovers in Dindigul

பெற்றோருடன் வசித்து வரும் அந்த பெண், வேறொரு இளைஞருடன் நட்பு ரீதியாக பழகி உள்ளார். அந்த பழக்கம் தற்போது காதலாக மாறி உள்ளது. இருவரும் காதலித்து வருகின்றனர். இதேபோல் அந்த பெண்ணின் 17 வயது தங்கையும் ஒரு இளைஞரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

அக்காள் தங்கை இருவரும் தங்களது காதலர்களுடன் கடந்த 30-ந்தேதி இடையக்கோட்டை அருகே நடந்த கோவில் திருவிழாவை பார்க்க சென்றுள்ளார்கள். திருவிழா முடிந்ததும் நள்ளிரவு 1 மணி அளவில் திண்டுக்கல்லுக்கு வந்துள்ளனர். அங்கிருந்து தங்களது ஊருக்கு செல்வதற்கு அவர்கள் 4 பேரும் திண்டுக்கல் மின்வாரிய தலைமை அலுவலகம் அருகே பழனி பைபாஸ் சாலையில் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தார்களாம்..

அப்போது அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிள்களில் 3 வாலிபர்கள் வந்தனர். இளம்பெண்கள், 2 பேருடன் நிற்பதை பார்த்த அந்த வாலிபர்கள் நீங்கள் யார்? எதற்காக இங்கு நிற்கிறீர்கள்? என்று கேட்டனர். அப்போது அவர்கள் தாங்கள் காதலர்கள் என்றும், ஊருக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்திருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்கள்..

அப்போது திடீரென்று தாங்கள் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, தங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் ஏறும்படி அவர்கள் கூறினார்களாம். இதனால் உயிருக்கு பயந்த 2 இளம்பெண்கள் மற்றும் அவர்களுடைய காதலர்கள், அந்த வாலிபர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் சென்றார்களாம். 4 பேரையும் அந்த வாலிபர்கள் திண்டுக்கல் அருகே தாமரைகுளத்தில் உள்ள மைலாப்பூர் என்ற குளத்துக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

அங்கு ஏற்கனவே மற்றொரு வாலிபர் நின்று கொண்டிருந்தாராம். அப்போது திடீரென அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி, இளம்பெண்களுடன் வந்த அவர்களின் காதலர்கள் 2 பேரின் கை, கால்களை கயிற்றால் கட்டிப்போட்டார்களாம். பின்னர் அந்த வாலிபர்கள் 4 பேரும், அக்காள், தங்கை இருவரையும் ஒருவர் பின் ஒருவராக மாறி, மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தங்களது கண்முன் காதலிகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை பார்த்து காதலர்கள் கண்ணீர் விட்டு அழுதார்களாம்

விடிய, விடிய அந்த இளம்பெண்களை தங்களது பாலியல் இச்சைக்கு ஆளாக்கிய அந்த இளைஞர்கள் விடிந்ததும், அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களுடன் தப்பி ஓடிவிட்டனர். பாதிக்கப்பட்ட 2 இளம்பெண்களும், தங்களுடைய காதலர்களின் கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டதுடன், தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள்.

அப்போது இளம்பெண்கள் கூறிய அடையாளத்தை வைத்து, கொடூர செயலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்த 26 வயதாகும் வினோத்குமார், மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த 21 வயதாகும் சரண்குமார், முருகபவனத்தை சேர்ந்த 22 வயதாகும் சூர்யபிகாஷ், தாமரைகுளத்தை சேர்ந்த சுள்ளான் என்ற பிரசன்னகுமார் (ரவுடி) ஆகிய 4 பேர் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்களில் சரண்குமார், வினோத்குமார், சூர்யபிரகாஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய பிரசன்னகுமார் தலைமறைவாகி விட்டார். பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று இரவு தனியாக இருந்த காதலர்களை பார்த்துள்ளனர். அப்போது இதுகுறித்து பிரசன்னகுமாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பிரசன்னகுமார் தான் பலாத்கார ஐடியாவை கொடுத்தாராம். அதன்பேரில் 3 பேரும் இளம்பெண்களை காதலர்களுடன் மைலாப்பூர் குளத்துக்கு கடத்திச்சென்றார்களாம். அங்கு ஏற்கனவே காத்திருந்த பிரசன்னகுமார், அவர்களுடன் சேர்ந்து இளம்பெண்களை பலாத்காரம் செய்ததும் விசாரணையில் உறுதியாகி உள்ளது.

தலைமறைவாக உள்ள பிரசன்னகுமார் பிரபல ரவுடி என கூறப்படுகிறது. அவர் மீது திண்டுக்கல், தாடிக்கொம்பு, வேடசந்தூர் போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. திண்டுக்கல் நகரில் காதலர்கள் கண் முன்னே காதலிகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+