திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Budget 2019 :பெட்ரோல், டீசல் மீது கூடுதல் செஸ் வரி விதிப்பு..விலை உயரும் அபாயம்- வீடியோ

    திண்டுக்கல்: தமிழகத்தில் உள்ள 38 எம்.பி.க்களும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    அனைத்துத் துறைகளிலும் நாடு மேலும் வளர்ச்சி பெற உகந்த தொலைநோக்கு பார்வை கொண்டது பட்ஜெட். முன்னேற்றத்திற்கான கொள்கைகள், திட்டங்களோடு தாக்கல் செய்த பட்ஜெட்டை வரவேற்கிறேன் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். மேலும், பல்வேறு வேளாண் திட்டங்களுக்கு கணிசமான நிதி ஒதுக்க வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டப் பணிகளுக்கான ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும்.

    38 MPs have to speak on the hike in petrol and diesel prices says Minister Dindigul Srinivasan

    கோவை, மதுரை மாநகராட்சியில் புதிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். சென்னை புறநகர் ரெயில்வே சேவைகளை மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    இந்தநிலையில், செய்தியாளர்களிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: பட்ஜெட்டுக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது உண்மை தான் என்றும், தமிழகத்தில் உள்ள 38 எம்.பி.க்களும் இது குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    எல்லோருக்கும் ஏற்பட்ட உணர்வு தான் எங்களுக்கும் ஏற்படுகிறது. விலையை குறைக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைப்பதற்கு பிரதமரை சந்திக்கும் போது முதலமைச்சர் பழனிசாமி பேசுவார்.

    மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் ஆனைமலை சரணாலயம், கொடைக்கானல் புலிகள் சரணாலயம் இணைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    English summary
    Minister Dindigul Srinivasan has asked 38 MPs to speak in Parliament on the hike in petrol and diesel prices.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X