அண்ணே.. பாத்துண்ணே.. குழந்தை வெளியே விழுந்துற போகுது.. தூங்கிய குழந்தையை பாடி எழுப்பிய மன்சூர்!

பழனி அருகே தாலாட்டு பாடி மன்சூரலிகான் வாக்கு சேகரித்தார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Mansoor Ali Khan campaign | திண்டுக்கல் தொகுதியில் மன்சூரலிகான் அசத்தல் பிரச்சாரம்

    திண்டுக்கல்: ஆரீரரோ.. ஆராரிரோ.. என்று குழந்தை தூங்கவே முடியாத அளவுக்கு மன்சூரலிகான் ஒரு தாலாட்டை பாடி ஓட்டு சேகரித்தார்!

    திண்டுக்கல் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூரலிகான் 2 நாளைக்கு முன்னாடி மயங்கி கீழே விழுந்தார்.

    பிறகு உடன் இருந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் எப்போது டிஸ்சார்ஜ் என்றே தெரியவில்லை, பழனியில் ஆஜராகி இருந்தார்.

    வயல்வெளி

    வயல்வெளி

    ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனவர் போலவே தெரியவில்லை. பழனி சுற்றுவட்டார பகுதிகளில் ஓடியாடி ஓட்டு கேட்டு கொண்டிருந்தார். அப்போது வயல்வெளிகளில் வேலை பார்த்தவர்களிடம் ஓட்டு கேட்க சென்றார்.

    தாலாட்டு

    தாலாட்டு

    அதில் ஒரு பெண் அங்கிருந்த மரக்கிளை ஒன்றில் சேலையை தூளியாக கட்டி, அதில் தன்னுடைய குழந்தையை தூங்க வைத்திருந்தார். குழந்தையும் நன்றாக தூங்கி கொண்டிருந்தது. இதை பார்த்த மன்சூரலிகான் "நான் குழந்தைக்கு தாலாட்டு பாடுகிறேன்" என்று சொல்லி, தொட்டிலை ஆட்ட தொடங்கினார்.

    ஊஞ்சல்

    ஊஞ்சல்

    பிறகு ஆரீரரோ.. ஆராரிரோ.. என்று பாட்டு பாட ஆரம்பித்தார். ஆனால் தூங்கி கொண்டிருந்த குழந்தை எழுந்து கொண்டது. இதையடுத்து குழந்தையை அந்த பெண் தூக்கி கொண்டார். உடனே அந்த தூளியில் மன்சூர் போய் உட்கார்ந்து கொண்டு ஊஞ்சல் ஆட போனார். ஆனால் என்ன நினைத்தாரோ... உடனே அதிலிருந்து எழுந்து நின்று கொண்டார்.

    வாக்குசேகரிப்பு

    வாக்குசேகரிப்பு

    இதற்குள் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் மன்சூரை பார்த்ததும் ஓடிவந்தனர். அப்போது அவர்களிடம் மன்சூர் விவசாயி சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+