Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லைசென்ஸ் கேட்ட ஏட்டய்யாவுக்கு கத்திக்குத்து! அதிமுக நிர்வாகியின் மகன் கைது!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வாகனத் தணிக்கையில் இருந்த பெண் காவலர்களுடன் தகராறு செய்ததை தட்டிக் கேட்ட ஏட்டய்யாவை அதிமுக நிர்வாகியின் மகன் கத்தியால் குத்திய பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

கொடைக்கானலில் வாகனத் தணிக்கையில் இருந்த இரு பெண் காவலர்கள் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து வாகனத்திற்குரிய ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால் பெண் காவலர்கள் என்பதால் அலட்சியமாக நடந்து கொண்ட அதிமுக நிர்வாகியின் மகன், அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

திமுக எம்பியின் சகோதரர்.. நடிகர் ஆர்.என்.ஆர்.மனோகர் மாரடைப்பால் மரணம்.. விஸ்வாசம், கைதியை நடித்தவர்3

வாகன தணிக்கையில் போலீசார்

வாகன தணிக்கையில் போலீசார்

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளியூர் மக்கள் வந்து செல்வது வழக்கம். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்போதெல்லாம் கொடைக்கானல் போக்குவரத்தால் ஸ்தம்பிப்பத்து வழக்கம். இந்த பிரச்சனையை சரி செய்ய போலீசார் எப்போதும் கவனித்து வாகனங்களை ஒருங்கிணைத்து அனுப்புவது வழக்கம். இந்நிலையில் கொடைக்கானல் பேருந்து நிலையம் அமைந்துள்ள அண்ணா சாலையில் 2 பெண் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

பெண் காவலர்களுடன் தகராறு

பெண் காவலர்களுடன் தகராறு

அப்போது அவ்வழியே ஒரு இருசக்கர வாகனம் அதிவேகமாக வந்துள்ளது. அந்த வாகனத்தை வழிமறித்த பெண் காவலர்கள் வாகனத்தின் ஆவணங்கள் கேட்டுள்ளனர். மேலும் தலைக்கவசம் அணியாமல் பைக் ஓட்டி வந்தது ஏன் என வினவி உள்ளனர். ஆனால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரும் கேட்பது பெண் காவலர்கள் என்பதால் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.

அவதூறு பேச்சு

அவதூறு பேச்சு

ஆனால் பெண் காவலர்கள் கிடுக்குப்பிடியாக ஆவணங்களை கேட்க ஆத்திரமடைந்த இருவரும் அவர்களுடன் தகராறு செய்ய ஆரம்பித்து விட்டனர். உள்ளூரிலேயே செல்வதற்கு எதற்கு தலைக்கவசம் என்றெல்லாம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி 2 பேரும் சேர்ந்து பெண் காவலர்களை அவதூறாக பேசி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

அதிமுக நிர்வாகியின் மகன்

அதிமுக நிர்வாகியின் மகன்

இதையடுத்து நடந்த சம்பவம் பற்றி பெண் காவலர்கள் காவல் நிலையத்திற்கு சென்று தலைமைக் காவலர் சின்னச்சாமியிடம் தெரிவித்தனர். இதை அடுத்து வாகன பதிவெண் வைத்து பெண் காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டது யார் என்பது கண்டறியப்பட்டது. அவர்கள் அப்பகுதியில் 4வது வார்டில் வசிக்கும் அதிமுக நிர்வாகி பரிமளாவின் மகன் மற்றும் அவரது நண்பர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க தலைமை காவலர் சின்னச்சாமி தெரசா நகரில் உள்ள பரிமளா வீட்டிற்கு சென்றார்.

தலைமைக் காவலருக்கு கத்திக் குத்து

தலைமைக் காவலருக்கு கத்திக் குத்து

அப்போது தலைமைக் காவலருக்கு உரிய பதில் அளிக்காமல் பரிமளாவின் மகன் சையது இப்ராஹிம் மற்றும் அவரது நண்பர் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இருவரும் தங்களிடம் இருந்த கத்தியால் தலைமைக் காவலரை குத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த தலைமைக் காவலர் சின்னசாமியை அருகிலிருந்தவர்கள் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

கைது

சையது இப்ராஹிம் மற்றும் அவரது நண்பர் உடனடியாக அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமைறைவான சையது இப்ராஹிம் மற்றும் அவரது நண்பர் ஆகியோரை தேடி வந்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+