சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்!
திண்டுக்கல்: நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வருத்தம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவருக்கு கண்டனம் எழுந்து வரும் நிலையில், அவரைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் அதிமுக மூத்த நிர்வாகியான திண்டுக்கல் சீனிவாசன். பெண்களின் உடை குறித்து அவர் பேசிய பேச்சு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நடிகை நயன்தாரா குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி இருந்தாr.
தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் நடிகர் சங்கம் உள்ளிட்ட அவையும் கண்டனம் தெரிவித்த நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார் சி.வி சண்முகம். இதற்கிடையே அடுத்ததாக ஒரே நாளில் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன்.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையில் தே.ஜ. கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்து. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொருளாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் பாஜக மாநில செயலாளர் ராம சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்ட மேடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது," மோசமான, கேவலமான ஒரு ஆட்சி இன்னும் 30 முதல் 45 நாட்கள் இருக்கும் ஓட்டு எண்ணிக்கை முடிந்த அடுத்த நாள் தமிழகத்தின் NDA கூட்டணியில் தலைமை பொறுப்பேற்று இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சர் பொறுப்பு ஏற்கின்ற பொழுது அத்தனை பீடையும் அத்தனை சனியனும் தொலைந்து போய்விடும்.
தூத்துக்குடி சகோதரிக்கு நடந்த கொடுமையை கேட்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் தங்கை கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் சென்றபோது வெளியே செல்லுங்கள் என்று கூறி முதலமைச்சரின் தங்கையை வெளியேற்றுகின்றனர்.
இந்த ஆட்சி கேவலமானது என்பதற்கு தூத்துக்குடியில் இருந்து கனிமொழி மற்றும் அமைச்சர் கீதா ஜீவனை வெளியேற்றியதே சாட்சி. உலக நாடுகள் அடித்துக் கொள்கிறார்கள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இன்று புத்திசாலித்தனமாக ஜனநாயக முறைப்படி அறிவோடு அத்தனை வெளிநாடுகளிடம் பேசி LPG சிலிண்டர்களை அமைதியாக கொண்டு வந்து சேர்த்த உத்தமர் நரேந்திர மோடி ஜி.
நரேந்திர மோடி அவர்களின் சாணக்கியத்தனத்தினால் பெட்ரோல் டீசல் கேஸ் எதுவும் பிரச்சனை இன்றி கிடைத்து வருகிறது. நான்கு வருடம் 11 மாதம் எந்தவித ஊழல் குற்றச்சாட்டு இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி ஆண்டு வந்தார். ஜெயலலிதா அவர்கள் மற்றும் கருணாநிதி அவர்கள் இருக்கும்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக கூட திமுகவால் வர முடியவில்லை. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
எம்ஜிஆர் ஆட்சி ஜெயலலிதா ஆசியுடன் பாமக கூட்டணியுடன் 75 எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சியாக இருந்த வருகிறோம். தற்போது திமுக நூறு ரூபாய் மதிப்புள்ள ஹாட் பாக்ஸ் கொடுத்துள்ளது. மேலும் சேலை கொடுத்துள்ளனர். பாவாடை இல்லாமல் எப்படி கட்டுவது என பெண்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்." என்றார். அவரது இந்த பேச்சு கடும் கண்டனங்களை பெற்று வரும் நிலையில், அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications