எங்களையா பிடிக்கிற.. மணல் கடத்தலை தடுக்க முயன்ற விஏஓ மீது லாரி ஏற்றி கொலை முயற்சி: பழனி அருகே பகீர்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற வி.ஏ.ஓ, மற்றும் அவரது உதவியாளர், போலீசார் என நான்கு பேரை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பொன்னிமலைசித்தன் கரடு பகுதியில் அனுமதியின்றி லாரிகளில் மணல் அள்ளுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி , உதவியாளர் மகுடீஸ்வரன், பொதுமக்களுடன் சம்பவம் இடத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு மணல் அள்ளிய லாரிகளை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், அங்கு மணல் அள்ளியவர்களிடம் ஆயக்குடி பகுதிக்கான பாஸ் எதுவும் இல்லாததும் வேறொரு பகுதியான தாதநாயக்கன்பட்டியைச் சேர்ந்த குளத்திற்கான பாஸ் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து காவல் நிலையத்திற்கு லாரிகளை கொண்டு செல்லுமாறு வி.ஏ.ஓ., கருப்பசாமி கூறியுள்ளார். அதனை தொடர்ந்து லாரிகளை எடுத்துக்கொண்டு ஆயக்குடி காவல் நிலையம் செல்வதற்காக லாரிகளை முன்னால் செல்ல விட்டு பின்னால் வி.ஏ.ஓ, அவருடைய உதவியாளர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென லாரிகளை வேகமாக இயக்கியும், பின்னால் இருசக்கர வாகனங்கள் பின் தொடராத வண்ணம் ஜீப்பில் வந்தவர்கள் இருசக்கர வாகனத்தை முந்தவிடாமல் அவர்களை வலது புறமும், இடது புறமும் வாகனத்தை இயக்கி பின்னால் கதவை திறந்து விட்டு மண்ணை மேலே கொட்டியும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த வி.ஏ.ஓ கருப்புசாமி ஆயக்குடி காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். காவலர்கள் இருவர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். காவலர்கள் மீதும் லாரியை மேலே ஏற்றி மோதுவது போல் பாசாங்கு செய்துவிட்டு இரு லாரிகளையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு லாரியுடன் தப்பி ஓடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வி.ஏ.ஓ மற்றும் அவரது உதவியாளர் ஆயக்குடி ஆயக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மணல் திருட்டை தடுக்க வந்த வி.ஏ.ஓ., மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications