திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சரி முடிஞ்சாச்சு எலெக்சன்... கும்பக்கரை, அடுக்கம் வழியாக கொடைக்கானலுக்கு டிரெக்கிங் போலாமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election 2019: நாடுமுழுவதும் லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு- வீடியோ

    திண்டுக்கல்: கொடைக்கானலுக்கு எல்லாருமே போயிருப்பீங்க... வத்தலகுண்டுவில் இருந்து, காட்ரோடு, டம்டம்பாறை என மேலோ ஏறி இருப்பீங்க, இல்லாட்டி பழனி வழியாக கொடைக்கானல் போய் இருப்பீங்க. ஆனால் பெரியகுளம், கும்பக்கரை, அடுக்கம் வழியாக போய் இருக்கீங்களா... செம்ம என்ஜாய்மெண்டாக இருக்கும்..

    இப்போது அடிக்கும் வெயிலுக்கு, ஏதாவது மலைப்பகுதிக்கு 2 மாசத்துக்கு ஓடிடலாம் என எல்லாருக்கு தோன்றும். ஏனெனில் வெயில் அந்த அளவுக்கு கொடூரமாக இருக்கிறது. வருண பகவான் கருணை காட்டாத நிலையில், சூரிய பகவான் சுட்டெரித்து வருகிறார்.

    இந்த கொடுமையான வெயில் மற்றும் புழுக்கத்தில் இருந்து தப்பிக்க சில நாட்களாவது ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மூணாறு என வசதிக்கு தகுந்தார் போல் பட்ஜெட் போட்டு போவர்கள் மக்கள். இதில் கொடைக்கானலுக்கு செல்வோர், அதிகமாகவே இருப்பீர்கள், அதில் கொடைக்கானலுக்கு பைக்கில் டிரெக்கிங் செல்வோர் என்றால் உங்களுக்குத்தான் இந்த ஸ்டோரி.

    அண்ணனுக்காக வயநாடு வருகிறார் பிரியங்கா... 2 நாட்களுக்கு தீவிர பிரசாரம் அண்ணனுக்காக வயநாடு வருகிறார் பிரியங்கா... 2 நாட்களுக்கு தீவிர பிரசாரம்

    டிரெக்கிங் செல்லலாம்

    டிரெக்கிங் செல்லலாம்

    கொடைக்கானலுக்கு செல்வதற்கு பாதுகாப்பான வழி என்றால் நிச்சயம் வத்தலகுண்டு, காட்ரோடு, டம்டம்பாறை, பெருமாள் மலை வழிதான். ஆனால் இருசக்கர வாகனத்தில் டிரெக்கிங் சென்று ரசித்தபடி, செல்ல விரும்புவோருக்கு ஏற்ற வழியும் உள்ளது.

    கும்பக்கரை அருவி

    கும்பக்கரை அருவி

    அதற்கு காலையிலேயே நீங்கள் பெரியகுளத்தில் இருக்க வேண்டும். அப்படியே நேராக 8 கிலோமீட்டர் துரத்தில் இருக்கும் கும்பக்கரை அருவிக்கு சென்று உற்சாகமாக குளியல் போடலாம். பின்னர் அப்படியே அங்கிருந்து மலைகளின் இளவரசியாம் கொடைக்கானல் செல்லலாம் அதற்கு கும்பக்கரை அருவியில் இருந்து பெரியகுளம் சாலையில் 2 கிலோமீட்டர் தூரம் வரவேண்டும். அப்படியே அங்கிருந்து இடதுபுறம் சென்றால் கொடைக்கானல் சாலை வந்துவிடும்..

    கொடைக்கானல் சாலை

    கொடைக்கானல் சாலை

    அதன்பிறகு சில கிலோமீட்டர் பயணித்தால் மாமரதோப்புகளின் வழியாக பயணித்தால் கொடைக்கானல் மலை உங்களை வரவேற்க ஆரம்பிக்கும். அப்படியே மலை ஆரம்பிக்கும் இடத்தில் செக் போஸ்ட்டும் அமைந்திருக்கும். அவர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே மேலே கொடைக்கானலுக்கு செல்ல முடியும் என்பதை தெரிவித்து விடுகிறேன்.

    அனுமதி கிடையாது

    அனுமதி கிடையாது

    ஏனெனில் மதுபோதையிலோ அல்லது வனத்துக்கு சம்பந்தம் இல்லாத நபர்களையோ, சந்தேகப்படக்கூடிய நபர்களையே அனுமதிக்க மாட்டார்கள். எனவே வனத்துறையினரின் அனுமதிக்கு பிறகு அந்த சாலையில் பயணிக்கலாம்.

    அழகான மலை

    அழகான மலை

    உள்ளே மலையில் சாலையில் நீங்கள் பயணிக்க ஆரம்பித்தால் சில கிலோமீட்டருக்கு சாலைகள் போடப்படாமல் இருக்கும். அதன் பிறகு சாலைகள் மிக தரமாக இருக்கும். அப்படியே மேலே செல்ல செல்ல குளுமையும் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகும் உங்களை மெய்சிலிர்க்க வைக்கும், ஒவ்வொரு இடங்களும் உங்களை உலகத்தை மறக்க வைக்கும்.அதை வார்த்தைகளால் சொல்வதைவிட நீங்கள் சென்று பார்த்தால் புரியும்.

    பேருந்து கிடையாது

    பேருந்து கிடையாது

    சரியாக 7 கிலோ மீட்டர் தூரம் செங்குத்தாக பயணித்தால் மிக அழகான அடுக்கம் கிராமம் வந்துவிடும். அரசு மற்றும் தனியார் பேருந்து வசதி என்பது அந்த கிராமத்திற்கு கிடையாது. நவீனங்களின் கால் தடங்கள் எட்டிப்பார்க்காத அந்த கிராமத்தை கடந்து செல்ல செல்ல ரம்மியாக இருக்கும்.

    பெட்ரோல் பங்க்

    பெட்ரோல் பங்க்

    அடுக்கம் கிராமத்தில் இருந்து 13 கிலோமீட்டர் பயணத்தை தாண்டினால் கொடைக்கானலின் முகப்பான பெருமாள் மலை வந்துவிடும். இடையில் ஒரு சில கிராமங்கள் வரும். எனினும் பெட்ரோல் பங்க் உள்பட எந்த வசதியாக இருந்தாலும் ஒன்று பெரியகுளமோ அல்லது அங்கிருந்து 25 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் பெருமாள் மலையில் தான் இருக்கும்.

    தலைக்கவசம்

    தலைக்கவசம்

    எனவே வனப்பகுதியில் செல்லும் போது, போதிய அளவு பெட்ரோல் இருப்பை உறுதி செய்து கொள்ளுங்கள், தலைகவசம் கட்டாயம் இருப்பதும் நல்லது. வனப்பகுதியில் செல்லும் போது காட்டுமாடுகள் தொல்லை இருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் கவனமாக செல்ல வேண்டும். மாலை நேரங்களிலோ அல்லது இரவு நேரங்களிலோ செல்வது மிக ஆபத்தானது.

    குளுமையை உணரலாம்

    குளுமையை உணரலாம்

    பெரியகுளம்- அடுக்கம் பாதை என்பது கூகுள் மேம்பிலும் இருக்காது, இந்த பாதை மிகமிக செங்குத்தான உயரத்தில் இருக்கும். ஆனால் அற்புதமாக இருக்கும், மலையில் செல்வது போன்ற ஒரு உணர்வே உங்களுக்கு வராது. அடுக்கம் தாண்டினால் தான் ரம்மியான மலையின் குளுமையை உணர முடியும். பைக் பிரியர்களுக்கு இது அற்புதமான இடம். ஆனால் வனத்துறை அனுமதி இருந்தால் மட்டுமே மேலே செல்ல முடியும்.

    English summary
    periyakulam to kodaikanal via kumbakarai and adukkam village, this is a best track route for kodaikanal trekking
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X