கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சியில் தலை இல்லாமல் மிதந்த பெண் உடல்.. ஆடிப்போன சுற்றுலா பயணிகள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் நுழைவு வாயிலாக உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி புகழ் பெற்ற சுற்றுலா தலம் ஆகும். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் யாராக இருந்தாலும் நீர்வீழ்ச்சியை பார்த்து ரசிக்காமல் போக மாட்டார்கள். அவ்வளவு அற்புதமான அருவியாகும். நேற்று மாலை வெள்ளி நீர்வீழ்ச்சியின் தடாகத்தில் தலை இல்லாமல் பெண்ணின் உடல் மிதந்து வந்ததால், சுற்றுலா பயணிகள் ஆடிப்போனார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் என்பது மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அற்புதமான சுற்றுலா தலம் ஆகும். தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். சனி, ஞாயிறு உள்ளிட்ட வார இறுதிகளில் மக்கள் கூட்டம் எப்போது அலைமோதும். கோடைக்காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடமாக கொடைக்கானல் இருக்கிறது. கொடைக்கானலில் சுற்றிபார்க்க ஏராளமான சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளது.

செயற்கையாக வடிவமைக்கப்பட்ட நட்சத்திர ஏரி, உலகப்புகழ் பெற்ற ஏரியாகும். இந்த ஏரியில் படகுசாவரி செய்வது பலருக்கும் பிடிக்கும். இதேபோல் பேரிஜம் ஏரி, குணா குகை, மன்னவனூர் ஏரி, பூம்பாறை முருகன் கோவில், கோக்கர்ஸ் வாக், கொடைக்கானல் பிரயண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா,குறிஞ்சி ஆண்டவர் கோவில், பசுமை பள்ளத்தாக்கு , மாதா ஆலயம், ரோஜா பூங்கா, புலிவால் அருவி, வெள்ளிநீர் வீழ்ச்சி என பல பகுதிகள் உள்ளன.
இதில் வெள்ளி நீர் வீழ்ச்சி என்பது கொடைக்கானல் நகரின் நுழைவு வாயிலாகும். இங்கு தான் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. இதை கடந்துதான் யாராக இருந்தாலும் கொடைக்கானலுக்குள் நுழைய முடியும். கொடைக்கானலை விட்டு வெளியேற முடியும். இந்த வெள்ளி நீர்வீழ்ச்சி என்பது கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடம். இந்த இடத்தில் குளிக்க அனுமதி இல்லை. இதனால் எப்போது இதனை ரசித்துவிட்டு செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் தொடர் மழையால் நட்சத்திர ஏரி நிரம்பி வழிகிறது. இதன்காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இந்தநிலையில் நேற்று மாலை வெள்ளி நீர்வீழ்ச்சியின் தடாகத்தில் தலை இல்லாமல் பெண்ணின் உடல் அழுகிய நிலையில் மிதந்து வந்தது. இதனை பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து கொடைக்கானல் போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் தீயணைப்பு படையினர் உதவியுடன் தடாகத்தில் மிதந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் கூறுகையில், "வெள்ளி நீர்வீழ்ச்சி தடாகத்தில் நேற்று மாலையில் பெண் உடல் தலை இல்லாமல் மிதந்து வந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்று உடலை மீட்டோம்.. தலை இல்லாததால் அவர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அதனை அடையாளம் கண்டறிய முடியும். மேலும் அவர் தண்ணீரில் விழுந்து இறந்தாரா? அல்லது வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு பலியானாரா? அல்லது கொலை செய்து உடல் இங்கு வீசப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்" என கூறினார்கள். கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி தடாகத்தில் பெண் உடல் தலை இல்லாமல் மிதந்து வந்த சம்பவத்தால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications