திண்டுக்கல்லில் பைக் - கார் மோதல்! 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நல்லாம்பட்டி பிரிவு அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து 4 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல் ரெண்டலப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் (25). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவரது மனைவி அருணா (23). இவர்களுக்கு ரக்ஷன் ஜோ (7) என்ற மகனும் ரக்ஷிதா என்ற மகளும் இருந்தனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் தனது மனைவி, இரு குழந்தைகளுடன் ஜோசப், மோட்டார் பைக்கில் ரெண்டலபாறையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நல்லாம்பட்டி பிரிவில் அந்த சாலையில் திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
திடீரென எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஜோசப், அருணா, அவர்களது இரு குழந்தைகள் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர். தகவலறிந்த திண்டுக்கல் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பலத்த காயமடைந்த இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து தாலுக்கா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications