திண்டுக்கல்லில் விநாயகர் சிலை ஊர்வலத்தில்.. இருதரப்பினரிடையே கடும் மோதல்! சாலை மறியல்!
திண்டுக்கல்: தமிழ்நாடு முழுவதும் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திண்டுக்கல் வேடசந்தூர் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2,234 விநாயகர் சிலைகள் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

விநாயகர் சதுர்த்தி முடிந்து 5ம் நாளான இன்று, இந்து முன்னி அமைப்பு சார்பில் விநாயகர் சிலையை கரைக்க கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அப்போது வேடசந்தூர் பகுதியில் வரிசையாக விநாயகர் சிலைகள் வாகனங்களில் வந்துக்கொண்டிருந்தன.
இந்த ஊர்வலத்தின்போது யார் முந்தி செல்வது என்கிற போட்டி ஏற்பட்டிருக்கிறது. இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்த மோதலில் 7 பேர் காயமடைந்திருக்கின்றனர். மண்டை உடைந்து, கை, கால்களில் அடிபட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சமாதானம் பேச போலீசார் முயன்றிருக்கின்றனர். அப்போது பள்ளி மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி மாணவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இதனால் வேடசந்தூர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதானம் பேசி போலீசார் அனுப்பி வைத்திருக்கின்றனர். மறியல் காரணமாக வேடசந்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.
திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பஞ்சாயத்து ஏற்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர், அதாவது கடந்த 27ம் தேதி இந்து முன்னணியினர் அனுமதியின்றி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச்செல்ல முயன்று கைதாகினர். அதாவது, திண்டுக்கல் குட்டைப்பாறைப்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைத்திருக்கின்றனர். ஆனால் இந்து முன்னணியினர் ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதை ஏற்காத இந்து முன்னணி அமைப்பினர் ஊர்வலம் போவதாக அறிவித்தனர். அறிவித்தபடி 27ம் தேதி மூன்றரை அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையை கொண்டு வந்து குட்டைப்பாறைபட்டி பகவதியம்மன் கோயிலில் வைத்து வழிபட்டனர். பின்னர் அதை கருப்பணசாமி கோயிலுக்கும் கொண்டு சென்றனர். அங்கு வழிபாடு முடித்து ஊர்வலம் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அனுமதியில்லாததால் அவர்களை தடுத்த போலீசார், சிலையை பறிமுதல் செய்து, உரிய சடங்குகளுடன் நீர் நிலையில் அதை கரைத்தனர். மட்டுமல்லாது ஊர்வலம் போக முயன்ற இந்து முன்னணியினர் 40 பேரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications