கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்.. நிர்மல்குமார் சொல்வதை மக்கள் நம்பவில்லை! பாய்ண்டை பிடித்த சண்முகம்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கூறுவதை மக்கள் யாரும் நம்பவில்லை என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்றால், பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் தான் மறுக்க வேண்டும் என்று கூறிய பெ.சண்முகம், தவெக அரசு வெளிப்படைத் தன்மையுடன் நடக்கவில்லை என்றும் சாடியுள்ளார்.

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் அம்மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் பத்மஜா இதுவரை எந்த மறுப்போ, விளக்கமோ கொடுக்கவில்லை. அதேபோல் அருள் விக்னேஷ்-ஐ தவெக் தலைமை கண்டித்துள்ளது.

CTR Nirmal Kumar

இருப்பினும் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் உட்பட பலரும் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல்லில் சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக திமுக ஆட்சியில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

பெ.சண்முகம் பேட்டி

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், காயம் அடைந்தவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரைத்திருந்தார். இதன் அடிப்படையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் ஆணையத்தின் பரிந்துரைப்படி முழுமையான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதனை சிபிஎம் சார்பில் வரவேற்கிறோம்.

அதேபோல் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் யார் என்பதைப் பெயர் பட்டியலுடன் அருணா ஜெகதீசன் ஆணையம் கொடுத்திருந்தும், திமுக ஆட்சியில் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தற்போதைய அரசு காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை

தொடர்ந்து, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநர் உள்துறை அமைச்சரை சந்திப்பது வழக்கமான பணிதான். தமிழ்நாட்டில் அதிக அளவிலான கொலைகளும், வன்கொடுமைகளும் நடைபெற்று வருவது எல்லோருக்கும் கவலை தரக்கூடிய ஒரு விஷயமாக உள்ளது. போதை கலாச்சாரம் அதிகரித்ததே இத்தகைய குற்றங்களுக்கு அடிப்படை காரணம்.

போதை கலாச்சாரத்திற்கு அடுத்தபடியாக வேலையின்மை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இதுபோன்று தவறான வழிகளில் திசை திரும்பக்கூடிய நிலைமை இருந்து வருகிறது. எனவே, வேலையின்மை பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். போதை கலாச்சாரத்திற்கு முற்றிலும் முடிவு கட்டப்பட வேண்டும் என்றார்.

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ சர்ச்சை

தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு, அத்தொகுதியின் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாலியல் ரீதியான குறுஞ்செய்தி அனுப்பினார் என்பது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு மாவட்ட மக்களுக்கே பாதுகாப்பாக இருந்து, குற்றங்களைத் தடுத்து விசாரிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவருக்கே இப்படிப்பட்ட ஒரு நிலைமை ஏற்பட்டிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியாகும்.

எனவே, சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். ஆனால் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், பத்திரிகையாளர்களைச் சந்தித்து அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. அது ஒரு வதந்தி என்றும் தெரிவித்துள்ளார். ஒருவேளை அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றால், பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்தான் அதனை மறுத்திருக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் மவுனம் ஏன்?

ஆனால் அவர் இதுவரை எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் மவுனம் காப்பது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் மறுக்கிறார், அரசின் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர் தரப்பிலிருந்து எந்த கருத்தும் வராதது சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த சந்தேகத்தைப் போக்க வேண்டியது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசின் பொறுப்பாகும். இப்படிப்பட்ட சம்பவம் நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட நபர் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் உடனடியாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

அரசு இந்த விஷயத்தில் வெளிப்படைத் தன்மையோடு நடந்து கொண்டதாகத் தெரியவில்லை. அமைச்சர் நேற்று மாலை தெரிவித்த கருத்தை மக்கள் யாரும் நம்பவில்லை. எனவே, மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அரசின் செயல்பாடு வெளிப்படைத் தன்மையோடு இருக்க வேண்டும். தவெகவின் 6 மாத கால ஆட்சியில் மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+