அக்னி சட்டியில் சிலுவையை வைக்க சதி! கிறிஸ்தவ வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு! அர்ஜுன் சம்பத் அட்டாக்!
திண்டுக்கல்: இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய வன்னியர்களை எம்பிசி பட்டியலில் சேர்க்கக் கோரி, திண்டுக்கல்லில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. இந்நிலையில், கிறிஸ்த்தவர்களின் போராட்டம், வன்னியர் சமூக மக்களின் எம்பிசி இட ஒதுக்கீட்டு சலுகைகளை, உரிமைகளை அபகரிக்க கிறிஸ்தவ மிஷனரிகள் மேற்கொள்ளும் சதி திட்டம் என இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய வன்னியர்களை எம்பிசி பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஆயர் பேரவையின் பிசி, எம்பிசி, டிஎன்சி, பணிக்குழு சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று திண்டுக்கல்லில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. திண்டுக்கல் மதுரை மாவட்ட ஆயிரம் பிசி, எம்பிசி, டிஎன்சி பணிக்குழு தலைவருமான தாமஸ் பால்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

அதில் தமிழகத்தின் பூர்வ குடிமக்களாக திகழும் வன்னியர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால் இட ஒதுக்கீடு வழங்க மாட்டோம் என கூறுவது ஏற்கத்தக்கது இல்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதி படி கிறிஸ்தவர்களை எம் பி சி பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், கிறிஸ்தவர்களின் போராட்டம், வன்னியர் சமூக மக்களின் எம்பிசி இட ஒதுக்கீட்டு சலுகைகளை, உரிமைகளை அபகரிக்க கிறிஸ்தவ மிஷனரிகள் மேற்கொள்ளும் சதி திட்டம் என இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," முறியடிக்க இந்து மக்கள் கட்சி தொண்டரணி சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் மேட்டுப்பட்டி கிராமத்தில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
காவல்துறையினர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தொண்டரணி தலைவர் திரு. மோகன் அவர்களை கைது செய்து வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் முழுக்க இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அப்பாவி வன்னிய சமூக மக்களை கிருத்தவராக மோசடி மதமாற்றம் செய்யும் கும்பலை முறியடிக்க வன்னியர் சமூக மக்களுடைய எம்பிசி சலுகைகளை அபகரிக்க நினைக்கின்ற கிறிஸ்தவ மிஷனரிகளின் சதித்திட்டத்தை முறியடிக்க இந்து மக்கள் கட்சி தொடர்ந்து ஜனநாயக முறையில் அறவழியில் போராடும்.
உச்ச உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக இட ஒதுக்கீட்டு சலுகைகளை அபகரிக்க நினைக்கும் கிறிஸ்தவ மாநாட்டை தடை செய்யாமல் வன்னிய சமூக மக்களின் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க போராடும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை கைது செய்வது கண்டனத்திற்குரியது. இது விஷயத்தில் வன்னியர் சங்க மாநாடு நடத்துகின்ற டாக்டர் ஐயா ராமதாஸ் அவர்களும் சின்னய்யா டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் வன்னிய சமூக மக்களுக்கான எம்பிசி இட ஒதுக்கீட்டு சலுகைகளை பாதுகாக்க முன்வர வேண்டும்.
வன்னியர் சமூக மக்களின் உரிமைகளை அபகரிக்க நினைக்கும் கிறிஸ்தவர்களை முறியடிக்க வேண்டும். ஆனால் அரசியல் காரணங்களுக்காக கிறிஸ்தவர்கள் நடத்தும் மாநாட்டை ஆதரிப்பது வன்னிய சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதியாகும். பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சமூகங்கள் ஒருங்கிணைந்து இதற்காக போராட்டம் நடத்த முன் வர வேண்டும். வன்னியர் சமூக மக்கள் அக்கினி சட்டியை சின்னமாக கொண்டவர்கள். அதை சிலுவை குறியீடாக மாற்றுவதற்கு மிஷனரிகள் சதி செய்கின்றன வன்னிய குல மக்கள் சத்திரியர்கள் ஆவார்கள். கிறிஸ்தவ மிஷனரிகள் இது விஷயத்தில் இரட்டை வேடம் போடுகிறார்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள் வன்னியர்களாக எப்படி வாழ முடியும்" என கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications