திண்டுக்கல்லில் கோயில் திருவிழாவில் குளிக்க போன பெண்கள்.. ஜன்னலில் அந்த 4 உருவம்! திரண்ட ஆயிரம் பேர்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: ஓட்டல்கள், லாட்ஜ்களில் செய்துகொண்டிருந்த அக்கிரமத்தை இப்போதெல்லாம் புனித தலங்களிலும் செய்ய துவங்கிவிட்டார்கள் ஆபாச பேர்வழிகள்.. ரகசிய கேமராக்களை பொருத்தி, பெண்களை படம் பிடிக்கும் செயல் அத்துமீறி நடந்து கொண்டிருக்கிறது.. கோயில் விழா என்றும் பாராமல் திண்டுக்கல்லில் இளைஞர்கள் செய்த காரியம், பொதுமக்களை கொந்தளிக்க வைத்துவிட்டது. இந்த செய்திதான் இணையத்தில் தீயாய் பரவி கொண்டிருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி முதல் பிப்ரவரி இறுதி வரை நடந்த மகா கும்பமேளாவின்போது பெண்கள் குளித்து உடை மாற்றும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை தந்திருந்தது.. அதேபோல, அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த பெண் பக்தர் குளிக்கும்போது வீடியோ எடுக்கப்பட்ட சம்பவமும் பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை தந்திருந்தது.

Dindigul Temple Festival Devotees

ராமேஸ்வரம் சம்பவம்

நம்முடைய ஊரிலும் இதே கொடுமை நடந்தது.. சில மாதங்களுக்கு முன்பு ராமேசுவரத்தில் ஒரு சபலிஸ்ட் பிடிபட்டார்.. புனித தலமாக கருதப்படும் ராமநாதசுவாமி கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து தரிசித்துவிட்டு, அங்குள்ள தீர்த்தக்கிணறுகளிலும் நீராடிவிட்டு செல்வது வழக்கமாகும். அந்தவகையில், புதுக்கோட்டையை சேர்ந்த 10 பேர் சாமி தரிசனம் முடிந்து, அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு, கடற்கரைக்கு எதிரிலேயே உடைகளை மாற்ற சென்றிருக்கிறார்கள்.

ஒரு டீக்கடையுடன் சேர்த்து, துணி மாற்றுவதற்கென்றே இடம் அங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.. தனியாருக்கு சொந்தமான இந்த இடத்தில் உடை மாற்றுவதற்கென்று கட்டணமும் உள்ளது. அந்தவகையில் புதுக்கோட்டை பெண்களும் உடை மாற்ற சென்றபோது, அந்த ரூமின் சுவர் வித்தியாசமானதாக இருந்திருக்கிறது.

டைல்ஸ் கற்கள்

உற்று பார்க்கும்போதுதான், கருப்பு நிற டைல்ஸ் கற்களுக்கு நடுவில் கேமரா பொருத்தப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. கேமராவை பொருத்திய டீக்கடை ஓனர் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து, அந்த கடைக்கும் சீல் வைத்திருந்தனர்.. இந்நிலையில், திண்டுக்கல் கோயிலில் ஒரு கொடுமை நடந்துள்ளது.

Dindigul Temple Festival Devotees

திண்டுக்கல் மாவட்டத்தில் செம்பட்டி பகுதியில் பல கோயில்கள் உள்ளன. இதில் வீரக்கல் பகுதியில் வெள்ளைமாலை வீரம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.. ஆண்டுதோறும் நடக்கும் இந்த கோயில் திருவிழாவில் ஒரு நாள் முழுக்க பக்தர்கள் தங்கியிருந்து கொண்டாடுவார்கள்.. எனவே, இந்த கோயில் விழாவில் பங்கேற்பதற்காக திண்டுக்கல் மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

இரவில் குளிக்க சென்ற பெண்கள்

அதன்படியே இந்த வருட திருவிழாவில் பங்கேற்பதற்காக திண்டுக்கல், தேனி, கரூர், ஈரோடு, கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கிட்டத்தட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.. பிறகு இரவு நேரம் பெண் பக்தர்கள் குளிப்பதற்காக கழிவறை சென்றுள்ளனர்.. அப்போது வண்ணம்பட்டியை சேர்ந்த 4 பேர், கழிவறையின் ஜன்னல் வழியாக செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.. இதை பார்த்து பெண்கள் அலறி கூச்சலிட்டுள்ளனர்.

பெண்களின் சத்தத்தை கேட்டு திருவிழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் விரட்டிச் சென்று அந்த 4 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து தர்ம அடி தந்தனர்.. பிறகு அங்கிருந்த செக்யூரிட்டியிடமும் 4 பேரை ஒப்படைத்தனர். ஆனால், அந்த செக்யூரிட்டியோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், போலீசுக்கும் புகார் தராமல் தப்பிக்க விட்டதாக கூறப்படுகிறது.

Dindigul Temple Festival Devotees

விடிய விடிய போராட்டம்

சொந்த ஊர்க்காரர்கள் என்பதால் நால்வரையும் தப்பிக்க விட்டதாக கூறி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆவேசமடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு என்றும் பாராமல், செம்பட்டி நால்ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

சம்பந்தப்பட்ட4 பேரையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனர்.. விடிய விடிய இந்த போராட்டம் நடந்தது.. ஆயிரக்கணக்கணக்கானோர் திரண்டு போராட்டம் செய்ததால், திண்டுக்கல், தேனி, மதுரை, பழனி சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+