திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்து.. மூச்சுத்திணறல் ஏற்பட்டே பலியான சோகம்.. உருக்கமான தகவல்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். முன்னதாக தீ விபத்து நடந்தபோது மின்சாரம் இல்லாததால் மருத்துவமனை முழுவதும் இருள் சூழ்ந்தது. இதனால் தப்பி வெளியே வர பாதை தெரியவில்லை. இதில்பயம், பதற்றத்தில் இருந்தவர்கள் மருத்துவமனை முழுவதும் பரவிய கரும்புகையில் சிக்கி கொண்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருக்கிறது.

விபத்து நடந்த 15 நிமிடத்திற்குள் அரசு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தீ விபத்து நிகழ்ந்த மருத்துவமனைக்கு அமைச்சர்கள் ஐ பெரியசாமி, சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் பூங்கோடி முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் எம்எல்ஏவும் ஆன திண்டுக்கல் சீனிவாசன், பழனி எம் எல் ஏ செந்தில்நாதன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.

Dindigul hospital fire accident All the 6 deceased died of suffocation

திண்டுக்கல் மாவட்டம் திருச்சி சாலையில் சிட்டி மருத்துவமனை என்ற தனியார் ஹாஸ்பிட்டல் இயங்கி வருகிறது. எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்கும் இந்த மருத்துவமனையில் சுமார் 60 பயணிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை இரவு மருத்துவமனை கட்டிடத்தில் உள்ள மின் சாதனம் திடீரென வெடித்து சிதறியுள்ளது.

இதனால், ஏற்பட்ட தீ விபத்து கண் இமைக்கும் நேரத்தில் மருத்துவமனை முழுவதற்கும் பரவியது. மருத்துவமனைக்குள் தீ பிடித்ததை பார்த்த நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியே ஒடினர். உடனடியாக தீ அணைப்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்ட நோயாளிகளை ஜன்னலை உடைத்து மீட்டனர். ஒரு பக்கம் தீயை அணைக்கும் முயற்சியும் முழு வீச்சில் நடைபெற்றது. கூடுதல் தீ அணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார்11 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட போது லிப்டில் ஏறி சிலர் தப்பிக்க முயன்றுள்ளனர்.

Dindigul hospital fire accident All the 6 deceased died of suffocation

ஆனால் தீ விபத்தால் மின்சாரம் கட் ஆனது. இதன் காரணமாக லிப்டில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கியுள்ளனர். இதன் காரணமாக, லிப்டில் இருந்த 5 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மேலும் இருவர் உள்பட இந்த பயங்கர தீ விபத்தில் மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் திண்டுக்கல் தீ விபத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தீ விபத்து நிகழ்ந்த மருத்துவமனைக்கு அமைச்சர்கள் ஐ பெரியசாமி, சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் பூங்கோடி ஆகியோர் நேரில் சென்றனர். அதேபோல, முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் எம்எல்ஏவும் ஆன திண்டுக்கல் சீனிவாசன், பழனி எம்எல்ஏ ஐபி செந்தில்குமார், வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் திண்டுக்கல் எஸ்பி பிரதீப் உள்ளிட்டோரும் நேரில் சென்று பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர், மருத்துவமனை வார்டுகளில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். தீ விபத்திற்கான காரனம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார். பழனி எம் எல் ஏ செந்தில் குமார் கூறுகையில், " மின்கசிவு காரணமாக தான் தீ விபத்து நடந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன" என்றார்.

உயிரிழப்பு ஏற்பட்டது ஏன்?:
தீ விபத்தில் இறந்தவர்களில் 2 பேருக்கு மட்டுமே தீக்காயம் ஏற்பட்டு இருக்கிறது. சிறுமி உள்பட 4 பேர் தீக்காயம் இல்லை. ஆனால் 6 பேரும் மூச்சுத்திணறியே இறந்து உள்ளனர். மின்சாரம் இல்லாததால் மருத்துவமனை முழுவதும் இருள் சூழ்ந்தது. இதனால் தப்பி வெளியே வர பாதை தெரியவில்லை. இதனால் பயம், பதற்றத்தில் இருந்தவர்கள் மருத்துவமனை முழுவதும் பரவிய கரும்புகையில் சிக்கி கொண்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருக்கிறது. அதோடு லிப்டில் சிக்கிய 3 பேர் உள்பட மொத்தம் 6 பேர் இறந்து விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+