6 உயிர்களை காவு கொண்ட மருத்துவமனை தீ விபத்து! விதிமீறல் இருந்தால் நடவடிக்கை.. அமைச்சர் மா.சு உறுதி!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சிட்டி மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து குறித்து தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," மருத்துவமனைக்கு உள்ள விதிகளை பின்பற்றாமல் இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் நேற்று சிட்டி ஹாஸ்பிட்டல் என்ற தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ 3 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50,000மும் வழங்கினார்.
பின்னர் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணி செய்தியாளர்களிடம் பேசுகையில்," திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஷார்ட் சர்க்யூட் என்ற வகையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தினால் எந்த நோயாளிகளுக்கும் பெருமளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஒருவருக்கு மட்டும் 10 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. யாருடைய அறிவுறுத்தலும் இன்றி ஆறு பேர் தாங்களாகவே லிப்டில் பயணம் செய்துள்ளனர். மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 6 பேரும் உயிரிழந்தனர்.
மூன்று ஆண்கள் இரண்டு பெண்கள் ஒரு குழந்தைகள் ஆகும். மருத்துவமனையில் இருந்த நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு புகைமூட்டம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், வருவாய் துறையினர் மற்றும் மாநகராட்சி பணியாளர்களால் ஏராளமானோர் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தகவல் கேள்விப்பட்டவுடன் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போர்க்கள அடிப்படையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்களில் புற நோயாளியாக சிகிச்சை பெற்று பெரும்பாலானோர் வீடு திரும்பி உள்ளனர். இதில் 3 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 41 பேரில் ஆறு பேர் மரணம் அடைந்தது போக மீதமுள்ள 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் நான்கு பேர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 31 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறதோ அதே சிகிச்சை திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்கப்பட்டது வருகிறது. இறந்தவர்கள் குடும்பகளுக்கு ரூ 3 இலட்சம் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து முதல்வர் வழங்கியுள்ளார். அதற்கான காசோலையை சம்பந்தப்பட்டவர்களிடம் இன்று வழங்கினோம்.

பலத்த காயம் அடைந்த நான்கு பேருக்கு தலா ஒரு லட்சத்திற்க்கான காசோலை வழங்கப்பட்டது. லேசான காயம் அடைந்த 31 பேருக்கு 50 ஆயிரம் விதம் வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 41 பேருக்கு 37 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது. தீ விபத்து குறித்து காவல்துறையினர் முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தனியார் மருத்துவமனைக்கு எந்தந்த வசதிகள் இருக்க வேண்டுமோ அது குறித்து காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். காவல்துறையினர் முழு அறிக்கை கொடுத்தவுடன் எந்த மாதிரியான விதிமீறல்கள் உள்ளது என ஆய்வு செய்யப்படும். தனியார் மருத்துவமனைக்கு உள்ள விதிகளை பின்பற்றாமல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications