திண்டுக்கல் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 LIVE: அதிமுகவை அலற விட்ட CPM..சச்சிதானந்தம் மெகா வெற்றி
திண்டுக்கல்: திண்டுக்கல் லோக் சபா தொகுதியில் முதன்முறையாக களம் காணும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சச்சிதானந்தம், அதிமுக சார்பில் இரட்டை இலையில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமத் முபாரக் ஆகியோர் களம் கண்ட நிலையில், வாக்கு எண்ணிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம், அதிமுக சார்பில் எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முகமது முபாரக், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா, நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் கயிலை ராஜன் ஆகியோர் களமிறங்கினர்.

திண்டுக்கல் தொகுதியை பொறுத்தவரை அதிமுகவுக்கு முதல் முறையாக வெற்றியை தேடித்தந்த தொகுதி. கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் வேலுச்சாமி சுமார் ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 7 லட்சத்து 46 ஆயிரத்து 523 வாக்குகள் பெற்று தமிழகத்திலேயே முதல் இடம் பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்ட ஜோதிமுத்து இரண்டு லட்சத்து 7 ஆயிரத்து 551 வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு இருந்த மன்சூர் அலிகான் 54 ஆயிரத்து 957 வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் திண்டுக்கல்லில் களம் இறங்கி இருக்கும் வேட்பாளர்கள் அனைவருமே புது முகங்கள் தான் குறிப்பாக சச்சிதானந்தம், நெல்லை முபாரக், திலகபாமா உள்ளிட்டோர் முதன்முறையாக மக்களவைத் தேர்தலை சந்திக்கின்றனர்.
முந்தைய தேர்தல் முடிவுகள்:
திண்டுக்கல் தொகுதியில் தேர்தல்களில் அதிமுகதான் அதிக முறை வென்றிருக்கிறது. 7 முறை அதிமுக, திமுக 2 முறை, காங்கிரஸ் 2 முறை , தமாக 1 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவுக்கு தேர்தல் தோறும் வெற்றி தேடித்தரும் சின்னமான இரட்டை இலையும் இந்தத் தேர்தலில் தான் களம் இறங்கியது. அதுமுதலே திண்டுக்கல் தொகுதி அதிமுகவுக்கு பல தேர்தல்களில் வெற்றி தேடி தந்துள்ளது. பெரும்பாலும் அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதியுள்ள இந்தத் தொகுதியில் சிலமுறை கூட்டணியுடன் காங்கிரஸ் வென்றுள்ளது
1989, 1991, 1998, 1999 ஆகிய தேர்தல்களில் முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் இந்த தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றிருக்கிறார். அதற்குப் பிறகு 1996,2004, 2009 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் தமாக மற்றும் காங்கிரஸ் சார்பில் என்எஸ்வி சித்தன் வெற்றி பெற்றுள்ளார்
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
வேலுசாமி (திமுக)- 746523
ஜோதிமுத்து (பாமக) - 2,07,551
ஜோதிமுருகன் (அமமுக)- 62,875
மன்சூர் அலிகான் (நாம் தமிழர்) - 54,957
2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்:
எம். உதயகுமார்(அதிமுக)-5,10,462
எஸ். காந்திராஜன்(திமுக)-3,82,617
கிருஷ்ணமூர்த்தி(தேமுதிக)-93,794
சித்தன்(காங்கிரஸ்)-35,632
2009ஆம் ஆண்டு லோக் சபா தேர்தல் முடிவுகள்:
என். எஸ். வி. சித்தன்(காங்கிரஸ்)- 3,61,545
பி. பாலசுப்ரமணியம்(அதிமுக)- 3,07,198
பி. முத்துவேல்ராசு(தேமுதிக)- 1,00,788
சீனிவாச பாபு(பகுஜன் சமாஜ் கட்சி)-6,960
திண்டுக்கல் மக்களவை தொகுதியில் அரசு ஊழியர்கள் - 5334, 85 வயது முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் - 1782, ராணுவத்தினர்- 755 என மொத்தம் தபால் ஓட்டுக்கள் 7271 என்ற எண்ணிக்கையில் பெறப்பட்டன. இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் முன்னிலை வகிக்கிறார்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 44,3933 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர், 670502 வாக்குகளை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் முகமது முபாரக் 226569 வாக்குகளும், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா 112544, நாதக வேட்பாளர் கையிலை ராஜன் 97938 வாக்குகளும் பெற்றுள்ளனர். நோட்டாவுக்கு 22129 வாக்குகள் கிடைத்துள்ளன.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications