101 ஆடுகளை பலியிட்டு! நள்ளிரவில் உருண்டை சோறு கிடாக்கறி விருந்து! நத்தம் அருகே ஆண்களுக்கான திருவிழா
திண்டுக்கல்: நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழாவில், நள்ளிரவில் உருண்டை சோறுடன் கூடிய கிடாக்கறி விருந்து அளிக்கப்பட்டது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பாதசிறுகுடியில் பொன்னர் சங்கர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் உருண்டைச் சோறுடன் கூடிய கறி விருந்து திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த கோவிலில் பல நூறு ஆண்டுகளாக இத்திருவிழா பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. நள்ளிரவு தொடங்கிய திருவிழாவில் ஏராளமான ஆண் பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
பக்தர்கள் நேர்த்திக் கடனாக வழங்கிய 101 ஆடுகளை சாமிக்கு பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டது. பின்னர் இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆடுகளை உரித்து சுத்தம் செய்து பின்னர் சமைத்தனர்.
சமையல் அனைத்தும் செய்த பின்னர் பூஜைகள் செய்யப்பட்டு பொன்னர் சங்கர் சாமிக்கு படைக்கப்பட்ட உருண்டை சாதத்தை மின் விளக்கை அணைத்த பின்னர் வானை நோக்கி எரிந்து பின்னர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு விருந்தாக பரிமாறப்பட்டது.
நள்ளிரவில் நடைபெற்ற இந்த வினோத திருவிழாவில் நத்தம், குட்டுபட்டி, பாதசிறுகுடி, குமரபட்டி, புதூர், குட்டூர், மாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்றனர்.


Click it and Unblock the Notifications
