”SIR" என் தொகுதியிலேயே கை வைச்சுட்டங்க.. கலெக்டர் சரவணன் சதி செஞ்சுட்டாரு! அமைச்சர் ஐபி பகீர் புகார்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பேரூராட்சியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடந்து வருகிறது. இதில், பெயர் விவரங்கள் சரிபார்க்கும் பணியில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது எனவும், 26 வாக்குச்சாவடிகளில் 7 ஆயிரத்து 227 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தமிழக ஊரக வளர்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி. குறிப்பாக இதன் பின்னணியில் தாசில்தார் முத்துமுருகன், கலெக்டர் சரவணன் உள்ளனர் எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லில் உள்ள திமுக கலைஞர் மாளிகையில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்," திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் சிறப்பு சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது.

நேற்று காலை முதல் ஆத்தூர் தாசில்தார் முத்துமுருகன் அனைத்து பி.எல்.ஓ களை நேரடியாக சந்தித்து இனி புதிதாக வாக்காளர்களை சேர்க்க வேண்டாம். மீதமுள்ள அனைவரும் குடி பெயர்ந்து சென்று விட்டதாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Dindigul I Periyasami dmk

ஐ பெரியசாமி

எஸ்ஐஆர் படிவம் பூர்த்தி செய்வதை இன்றுடன் முடித்து விட வேண்டும் என கூறியுள்ளார். மேலும் புதிதாக யாரையும் சேர்க்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் தொடர்பு விவரம் தெரிவித்த போது நான்காம் தேதி வரை கண்டிப்பாக அனைவரும் சேர்ப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஆனால் நேற்று இரவு ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் குடி பெயர்ந்து விட்டதாக பதிவேற்றம் செய்துள்ளனர்.

எஸ்ஐஆர் பணிகள்

சின்னாளப்பட்டியில் மொத்தம் 25,000திற்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளது. இதில் 7,227 வாக்காளர்கள் குடி பெயர்ந்து விட்டனர் என பதிவேற்றம் செய்து உள்ளனர். இன்று ஆத்தூர் தொகுதி முழுவதும் எஸ்ஐஆர் பணிகள் நடைபெறவில்லை. ஒரு ஓட்டு கூட இன்று சேர்க்கப்படவில்லை. 2016 ஆம் ஆண்டு நடைபெற்று தேர்தலில் சின்னாளப்பட்டியில் மட்டும் 17 ஆயிரம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதன் பின்னால் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆனால் நேற்று வரை புதிதாக வாக்காளர்கள் 16,800 வாக்காளர்களை மட்டுமே பதிவேற்றம் செய்துள்ளனர்.

சின்னாளப்பட்டி வாக்காளர்கள்

பத்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் 17,000 மேற்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளது. தற்பொழுது நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் வரிசையில் சிறப்பு பணியில் 16,800 வாக்காளர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் உள்ள வாக்காளர்கள் சிறப்பு முகாமில் பணியாற்றி வரும் பிஎல்ஓகளை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கி 21,800 வாக்களார்கள் குடி பெயர்ந்து விட்டனர் என பதிவேற்றம் செய்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் சரவணன்

மாவட்ட ஆட்சியர் சரவணன், தாசில்தார் முருகன் ஆகியோர் திட்டமிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்துள்ளனர். எஸ்ஐஆர் படிவம் பூர்த்தி செய்து தருவதற்கு 11 ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டிப்பு செய்துள்ளது. இந்நிலையில் ஆத்தூர் தொகுதியில் எஸ்ஐஆர் படிவம் பூர்த்தி செய்வது முடிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய தவறு நடந்துள்ளது இது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் தாசில்தார் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிஎல்ஓ

தேர்தல் ஆணையம் ஆத்தூர் தொகுதியில் வந்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் ஒவ்வொரு வார்டுகளிலும் 200 முதல் 300 வாக்காளர்களை பிஎல்ஓக்களை கொண்டு சேர்க்கக்கூடாது என கூறி அவர்கள் குடிப்பெயர்ந்து விட்டனர் என பதிவு செய்துள்ளனர். இதற்கான பட்டியல் என்னிடம் உள்ளது தமிழ்நாட்டிலேயே எங்கேயுமே நடந்திருக்காது இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தலையிட்டு மறு ஆய்வு செய்ய வேண்டும் சின்னாளப்பட்டி பேரூராட்சியில் முறையாக வாக்காளர் சேர்க்கை நடத்திட வேண்டும். அதேபோல் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள எல்லா பூத்துகளிலும் முறையாக வாக்காளர் சேர்க்கை நடத்திட வேண்டும். இதில் பெரும் சதி நடைபெற்றுள்ளது" என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+