அப்பாவி போல் இருக்கிறாரே.. இவர்தான் வனிதா.. செய்த காரியம் இருக்கே.. திகைத்துப்போன திண்டுக்கல்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவரை கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மணைவியை 3- மாதங்களுக்கு பின் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்
அரசு பள்ளி ஆசிரியர் உடன் ஏற்பட்ட கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொன்று விட்டு நாடகமாடிய இளம்பெண்ணை மூன்று மாதத்திற்கு பிறகு கைது செய்துள்ளனர். அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையருகேயுள்ள குரும்பட்டியில் கிழக்குதெருவைச் சேர்ந்தவர் சென்றாயான்- 39 (வயது). இவரது மனைவி வனிதா -35 (வயது). இருவக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

மர்ம மரணம்
கடத்த 3- மாதங்களுக்கு முன்பு 10/3/2021 அன்று மர்மமான முறையில் சென்றாயன் உயிழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நிலக்கோட்டை காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணமாக வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சென்றாயனின் பிரேதம் புதைக்கப்பட்டது.

காயங்கள்
இறந்து போன சென்றாயனின் தந்தை மொக்கைராஜ் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் "தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாகவும், என்று மகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம்" ,எனவே பிரேதப்பரிசோதனை செய்ய புகார் மனு அளித்தார் இதையடுத்து உடலை எடுத்து பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை வெளியான நிலையில் ,காயங்களுடன் கொலை செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.

அதிர்ச்சி தகவல்
இதனை அடிப்படையாக கொண்டு மனைவி வனிதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தாவல்கள் வெளியாயின. சென்றாயன் மானைவி போலீசார் விசாரணையில் கூறும் போது " குரும்பபட்டியைச் சேர்ந்த அய்யனார்- 50 (வயது) என்பவர் அரசு பள்ளி ஆசிரியர். பழையவத்தலக்குண்டு பள்ளியில் பணிபுரிகிறார். எனக்கும் அய்யனாருக்கும் நீண்டநாட்களாக கள்ளத்தொடர்பு இருந்துவந்தது.

நாடகம்
இதற்கு இடையூராக இருந்த எனது கணவர் சென்றாயனை தீர்த்துக்கட்ட இருவரும் முடிவு செய்தோம். இந்நிலையில் கடந்த 10/3/2021 அன்று எங்களை கண்டித்தால் நானும் என் கள்ளக்காதலன் அய்யனாரும் என் கணவரை தாக்கி கொலை செய்தோம். பின்னர் மர்மமான முறையில் இறந்து போனதாக கூறி நாடகமாடினோம். ஆனால் 3 - மாதத்திற்கு பிறகு எனது கணவரின் தந்தை அளித்த புகாரில் மாட்டிக்கொண்டோம் என்று கூறினார்.

ஆசிரியருக்கு வலை
பின்னர் நிலக்கோட்டை காவல் துறையினர் கொலைவழக்காக பதிவு செய்து கொலைசெய்யப்பட்ட சென்றாயனின் மனைவி வனிதாவை கைது செய்து நிலக்கோட்டை நீதித்துறை நடுவர்மன்றத்தில் ஆஜர்படுத்த பெண்கள் சிறையிலடைத்தனர். மேலும் கொலைக்கான முக்கிய குற்றவாளியான கள்ளக்காதலன் அரசுபள்ளி ஆசிரியர் அய்யனாரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவனை மனைவியே கள்ளக் காதலனோடு சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிவிட்டு தற்போது மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,












Click it and Unblock the Notifications