மானூர் பள்ளிக்கூட குடிநீர் தொட்டியில் மனித கழிவு..களத்தில் இறங்கிய எஸ்பி! மலம் கலந்தது இவர்களா? ஷாக்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதாக இருந்த புகார் தமிழகம் முழுவதும் பெறும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது இந்த விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரடியாக விசாரணை நடத்திய நிலையில் விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

​திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்திற்குட்பட்ட மானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். முதல் பருவத் தேர்வு விடுமுறை முடிந்து கடந்த திங்கட்கிழமை பள்ளி மீண்டும் திறக்கப்பட்டபோது, அங்கிருந்த சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியின் பைப் உடைக்கப்பட்டு, தொட்டிக்குள் மலம் கழித்து அசுத்தப்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

Dindigul School Water Tank Contamination Case

இச்சம்பவம் குறித்து பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கோ அல்லது கிராம மக்களுக்கோ உடனடியாகத் தெரிவிக்கப்படாமல் 2 நாட்களாக மூடி மறைக்கப்பட்ட நிலையில், நேற்று பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தின்போது இந்த அதிர்ச்சி உண்மை வெளியே கசிந்தது.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள், சின்னஞ்சிறு மாணவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

​இதுகுறித்து விளக்கமளித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், திங்கட்கிழமை காலையில் தொட்டி அசுத்தப்படுத்தப்பட்டிருந்ததைக் கண்டு, மாணவர்கள் யாரும் அத்தண்ணீரை அருந்திவிடக் கூடாது என்பதற்காக உடனடியாக பிளீச்சிங் பவுடர் போட்டுக் கழுவிச் சுத்தம் செய்து வைத்துவிட்டதாகவும், மாணவர்கள் யாரும் அந்த நீரைக் குடிக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், இச்சம்பவம் குறித்து மேல் அதிகாரிகளுக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

​இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட குடிநீர் தொட்டியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்களிடம் நேரில் விசாரணை நடத்திய அவர், இத்தகாத செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய உத்தரவிட்டார்.

​இதனைத் தொடர்ந்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் கீரனூர் காவல்துறையினர் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின்கீழ், பொதுக் குடிநீர் ஆதாரத்தை அசுத்தம் செய்தல் (பிரிவு 279), நோய் தொற்றைப் பரப்பும் வகையில் ஆபத்தான முறையில் செயல்படுதல் (பிரிவு 272) மற்றும் அசுத்தமான பொருட்களைக் கலந்து உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் (பிரிவு 123) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மானூர் அரசு தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக எழுந்த புகாரில் திடீர் திருப்பம். ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கீரனூர் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவர்கள் இருவர் விளையாட்டுத்தனமாக இச்செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாக மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை எனவும், விளையாட்டுத்தனமாக நடந்த செயல் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பள்ளி குடிநீர் தொட்டிக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+