கள்ளக்காதலனுடன் பறந்த பவித்ரா.. அவமானத்தில் குடும்பமே விபரீத முடிவு! அநியாயமா 4 உசுரு போச்சேங்க!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு இரண்டு பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளின் தாய் வேறு ஒரு நபருடன் சென்றதால் அவமானத்தில் குழந்தைகளை கொன்று விட்டு இரு பெண்களும் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியிருக்கிறது.
முறையற்ற உறவுகளால் கொலை, தற்கொலை உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறுவது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட காதலனுடன் செல்ல கணவனை தாக்கி விட்டு தப்பிய பெண் கைது செய்யப்பட்டார்.
இதே போல நூற்றுக்கணக்கான சம்பவங்களை உதாரணம் சொல்லலாம், ஆனால் இது போன்ற நடக்கும் சம்பவங்களால் பாதிக்கப்படுவது அப்பாவி குழந்தைகள் தான். அப்படி ஒரு சம்பவம் தான் திண்டுக்கல்லில் அரங்கேறி இருக்கிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரில் உயிர் பறி போய் இருக்கிறது. ஒரு பெண் கள்ளக் காதலனுடன் சென்றதால் இரண்டு பெண்கள் தற்கொலை செய்து கொண்டதோடு இரண்டு பெண் குழந்தைகளையும் கொலை செய்திருக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மாள். அவரது மகள் தான் 45 வயதான காளீஸ்வரி. காளீஸ்வரிக்கு 28 வயதில் பவித்ரா என்ற மகள் உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே உள்ள சௌந்தரபுரம் பகுதியைச் சென்ற பிரபாகரன் என்பவருடன் பவித்ராவுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த நிலையில் இருவரும் பள்ளப்பட்டியில் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு ரித்திக்ஷா, தீப்தி ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதை அடுத்து பவித்ரா தனது குழந்தைகளுடன் சின்ன குளிப்பாட்டிக்கு வந்து காளீஸ்வரியின் வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த வேறொரு நபருடன் பவித்ராவுக்கு முறையற்ற உறவு இருந்ததாகவும் அதன் காரணமாகவே பிரபாகரனுக்கும் பவித்ராக்கும் தகராறு ஏற்பட்டு ஒட்டன்சத்திரம் வந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் 17 ஆம் தேதியான நேற்று பவித்ரா பள்ளப்பட்டியை சேர்ந்த அந்த நபருடன் வீட்டை விட்டு மாயமானார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் மகள் மற்றொரு நபருடன் ஓடிப் போனதால் பாட்டி செல்லம்மாளும் அம்மா காளீஸ்வரையும் அவமானம் அடைந்துள்ளனர். மேலும் சிலர் வீட்டுக்கு வந்து உங்கள் மகள் ஓடிப் போய்விட்டாரா என கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்லம்மாளும் காளீஸ்வரியும், பவித்ராவின் மகள்களான லித்திக்ஷா, தீப்தி ஆகியோரை கொலை செய்துள்ளனர். பின்பு வீட்டிலிருந்த ஃபேனில் தூக்கு மாட்டி செல்லம்மாளும் காளீஸ்வரியும் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த அருகில் இருந்தோர் இடையகோட்டை காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் நான்கு பேரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளம்பெண் வேறு ஒருவருடன் மாயமானதால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Note: தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்..
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
கட்சி நிகழ்ச்சியா? அரசு ஆய்வுக் கூட்டமா? அமைச்சருக்கு இணையாக அதிகாரிகளுடன் அமர்ந்த தவெக நிர்வாகி! -
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'











Click it and Unblock the Notifications