விஜய்க்கு 5000 கோடி சொத்து.. பதவி கிடைக்காத ஆத்திரத்தில் வேலுமணி - சண்முகம்& கோ! அதிமுக மாஜி அட்டாக்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி போன்றவர்கள் தங்களுக்குப் பதவி கிடைக்காத ஆத்திரத்தில் தனி அணியாகச் செயல்பட்டு கட்சிக்கு துரோகம் இழைக்கின்றனர் எனவும், 5,000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள விஜய், அரசு கஜானா பணத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ₹30 லட்சம் மதிப்பிலான கார்கள் மற்றும் சலுகைகளை வாரி வழங்குகிறார் என விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

அதிமுக சார்பில் திண்டுக்கல் தனியார் திருமண மண்டபத்தில் அம்மா பேரவை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Dindigul Srinivasan Vijay TVK AIADMK

பின் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது," சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின் போது முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி பேசியதற்கு அப்போதைய அமைச்சர் பதிலளித்தார்.

திண்டுக்கல் சீனிவாசன்

அப்போது குறுக்கிட்ட கே.என். நேரு மற்றும் எ.வ. வேலு ஆகியோருக்கு எதிராக, கடந்த கால ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்த 3 தொகுதிகள் அடங்கிய ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். "புத்தகத்தை திறக்க வைத்துவிடாதீர்கள்" என்று முதலமைச்சர் எச்சரித்தும், தங்களுக்கு மடியில் கனமில்லை என்று கூறி அந்தப் புத்தகத்தைத் திறக்கச் சொல்ல துணிவில்லாமல் ஐ. பெரியசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகிய மூவருமே மௌனம் காத்தனர்.

அதிமுக

ஊரக வளர்ச்சித் துறை மட்டுமின்றி இன்னும் 30-க்கும் மேற்பட்ட துறைகளில் உள்ள ஊழல்களும் வெளிவர வேண்டும்; தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. சவுதியில் உயிரிழந்த தமிழக மீனவரின் உடலை மீட்கக் கோரி எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர முயன்றபோது, சபாநாயகர் 5 நாட்கள் அனுமதி மறுத்து மெத்தனமாகச் செயல்பட்டார். எடப்பாடியாரின் வெளிநடப்பு மற்றும் தொடர் அழுத்தத்திற்குப் பிறகே 6-வது நாளில் அனுமதி வழங்கப்பட்டது.

எம்எல்ஏக்களுக்கு கார்

மக்களின் உயிருடன் தொடர்புடைய அவசரப் பிரச்சினைகளுக்காக எடப்பாடியார் தொடர்ந்து உறுதியாகக் குரல் கொடுத்து வருகிறார். ரூ.5,000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள விஜய், அரசு கஜானா பணத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ₹30 லட்சம் மதிப்பிலான கார்கள் மற்றும் சலுகைகளை வாரி வழங்குகிறார். குதிரை பேரம் மூலம் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறுவதைத் தடுக்கவே மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. ராஜினாமா செய்த 6 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கொறடா உத்தரவை மீறியதற்காக அவர்களின் பதவியை ரத்து செய்ய எடப்பாடியார் உச்சநீதிமன்றம் வரை சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.

தேர்தல் வாக்குறுதிகள்

மகளிருக்கு ₹2,500 உரிமைத்தொகை மற்றும் ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படவில்லை. அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம், திருமண நிதி உதவியாக 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படவில்லை. பள்ளி மாணவர்களுக்கு ₹15,000, 5 ஏக்கருக்குட்பட்ட விவசாயக் கடன் தள்ளுபடி, மாதந்தோறும் மின் கட்டணக் கணக்கீடு (200 யூனிட் இலவசம்) ஆகியவை நிறைவேற்றப்படவில்லை. பால் கொள்முதல் விலையை ₹44 ஆக உயர்த்துவதாகக் கூறிவிட்டு, தற்போது ₹41 மட்டுமே அறிவித்து விவசாயிகளை ஏமாற்றியுள்ளனர்.

சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி போன்றவர்கள் தங்களுக்குப் பதவி கிடைக்காத ஆத்திரத்தில் தனி அணியாகச் செயல்பட்டு கட்சிக்கு துரோகம் இழைக்கின்றனர். தலைமைக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களே கட்சியில் நீடிக்க முடியும்; துரோகம் செய்தவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் கட்சியை வழிநடத்தும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கரங்களை வலுப்படுத்த தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும்" என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+