இதே வேலைதான் போல.. அறக்கட்டளை நிலம் மோசடியாக விற்பனை! ஜஸ்டின் மணிகண்டன் மீது மேலும் ஒரு புகார்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் மூலச்சத்திரம் அருகே உள்ள 41.17 ஏக்கர் அறக்கட்டளை நிலம் மனைப்பிரிவுகளாக மாற்றி 70க்கும் மேற்பட்டோருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் முகாந்திரம் இருப்பதாகக் கூறிய திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம், கடந்த அக்டோபர் 27-ம் தேதி மேல்நடவடிக்கை தொடர உத்தரவிட்டுள்ளது. பழனி கோவில் நில மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜஸ்டின் மணிகண்டன் ஜெயப்பிரகாஷ் சிவக்குமார் ஆகியோரே இந்த முறைகேட்டிலும் ஈடுபட்டதாக கூறுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் மூலச்சத்திரம் அருகே எட்டமநாயக்கன்பட்டியில் மதுரை செல்லும் சாலையையொட்டி KAY PEE YES TRUST என்ற பொது அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமார் 41.17 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் முதலில் சிறுவர்களுக்கான பள்ளியும், பின்னர் மகளிர் கல்லூரியும் அமைக்கத் திட்டமிடப்பட்டது.

Dindigul Land Fraud Court

ஆனால், இந்தத் திட்டங்கள் எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை. 1996 முதல் 2023 வரை அறக்கட்டளையின் சார்பில் எந்தவிதமான செயல்பாடுகளும் நடைபெறவில்லை. இதற்கிடையே, நிலம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வந்தது.

அறக்கட்டளையின் மொத்தம் 7 உறுப்பினர்களில் 4 பேர் 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் உயிரிழந்ததால், அறக்கட்டளை செயல்பட முடியாத நிலைக்குச் சென்றதாகப் கனகசபை என்பவர் புகார் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில், அறக்கட்டளையின் விதிமுறைகள் மற்றும் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், பிரேம் பிரைட் என்பவர் மீதமிருந்த 3 உறுப்பினர்களின் துணையுடன் சட்டவிரோதமாக ஆவணங்களைத் தயாரித்துள்ளார்.

2023 ஏப்ரல் 29 மற்றும் ஜூன் 21 ஆகிய தேதிகளில் ஆவணங்கள் உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பான் கார்டு பெறப்பட்டுள்ளது. மேலும், 2024 மே 10-ம் தேதி மற்றொரு ஆவணம் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் இரண்டாவது பான் கார்டு பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2025 பிப்ரவரி 19-ம் தேதி ஒட்டன்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில், அறக்கட்டளை நிலத்தைத் தங்களது கூட்டாளிகள் பெயரில் கிரயம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தப் பதிவுகள் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் துணையுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஜெயபிரகாஷ் என்பவர் சாட்சிக் கையெழுத்திட்டுள்ளனர். சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், ஜெயபிரகாஷ், சிவகுமார் ஆகியோர் பழனி மடநிலம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக, 2025 ஜூலை 1-ம் தேதி அறக்கட்டளை நிலத்தின் ஒரு பகுதியை ஒட்டன்சத்திரம் பெரியகரட்டுப்பட்டியைச் சேர்ந்த காளியப்பன், ரங்கதுரை, நித்யாதேவி மற்றும் விருபாட்சியைச் சேர்ந்த சிவகுமார் ஆகியோர் கிரயம் பெற்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், இந்த நிலத்தில் மனைப்பிரிவு அமைக்க ஆன்லைன் மூலம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்த இரண்டு நாட்களிலேயே உரிய சட்ட விசாரணை நடத்தாமல் அதிகாரிகள் அனுமதி வழங்கியதாகப் புகார் தெரிவிக்கிறது. இதையடுத்து, அந்த நிலம் 'மார்க்கெட் சிட்டி' (Market City) என்ற பெயரில் மனைப்பிரிவுகளாக மாற்றப்பட்டு, 70-க்கும் மேற்பட்டோருக்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. நிலத்தின் பின்னணி மற்றும் அதுதொடர்பான சட்டச் சிக்கல்கள் தெரியாமல் பொதுமக்கள் பலரும் மனைகளை வாங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை, பத்திரப்பதிவுத்துறை மற்றும் DTCP அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சில துறைகள் துறைரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், காவல்துறையிடம் கடந்த மார்ச் 2026-ல் அளிக்கப்பட்ட புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றத்தை கனகசபை அணுகியுள்ளனர்.

புகாரைப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இருதரப்பு ஆவணங்கள் மற்றும் வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், கடந்த 27.10.2026 அன்று புகாரில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி, அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடர உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+