திண்டுக்கல்லில் உயிருடன் இருப்பவரை இறந்தவர் போல் தேரில் அமர வைத்து ஊர்வலம் வந்த மக்கள்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் கன்னிவாடி அருகே மழை வேண்டி மக்கள் நோய்நொடி இன்றி வாழ வினோத திருவிழா நடந்தது. உயிருடன் இருப்பவரை இறந்தவர் போல் தேரில் அமர வைத்து வீதி உலா வந்த கிராம மக்கள் வலம் வந்துள்ளனர். தென்மேற்கு பருவ மழை பொய்த்து போய்விட்டது. இதில் மனைவியாக வேடமிட்ட கோமாளி என்ற முத்தையா என்பவர் தேர் முன்பாக அழுது கொண்டே மயானக்கரை வரை வந்ததை கிராம மக்கள் ஆச்சரியத்துடனும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

இயற்கையையும் விவசாயத்தையும் மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு தான் தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள்.. விவசாயம் தான் பெரும்பான்மையான தொழிலாக உள்ளது.இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பொய்த்து போய்விட்டது. இதனால் மக்கள் தங்களுக்கு தெரிந்த நூதன முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். காலம் காலமாக பின்பற்றும் அறிவியலையும் தாண்டிய கலாச்சாரம் மற்றும் நம்பிக்கை சார்ந்த சடங்குகளை கையில் எடுக்கிறார்கள்.

Dindigul a living person out in a procession seating him on a chariot as if he were dead

உதாரணமாக மழை பெய்ய வைக்க தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விசித்திர சடங்குகளை செய்து வருகிறார்கள். உதாரணமாக இரண்டு கழுதைகளுக்குப் பொட்டு வைத்து, மாலை மாற்றி, மேள தாளத்துடன் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து கல்யாணம் செய்து வைப்பார்கள். அதேபோல் கோயில்களுக்கு திருவிழா எடுத்து பொங்கல் வைத்து வழிபட்டால் மழை வரும் என்று மக்கள் நம்புவார்கள். கோடை காலங்களில் பல திருவிழாக்கள் மழைக்காக உருவானவை தான். தற்போது தென்மேற்கு பருவ மழை தமிழ்நாட்டை ஏமாற்றிவிட்டது. பல மாவட்டங்களில் போதிய மழை இல்லை. வறட்சி அதிகமாக உள்ளது. மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். திண்டுக்கல்லில் மழை வர வேண்டிய மக்கள் செய்தி விஷயத்தை பார்ப்போம்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆழத்தூரான்பட்டியில் செல்வ விநாயகர் காளியம்மன் மாரியம்மன் உற்சவ திருவிழா நடந்தது. இதில் இறுதி நாளான இன்று ஊர் மக்கள் நோய் நொடி இன்றி வாழவும் மழை வேண்டியும் உயிருடன் இருப்பவரை படைகட்டி தேரில் அமர்ந்து வைத்து இறந்தவருக்கு என்னென்ன சடங்கு செய்வார்களோ அதே மாதிரி செய்து அவரை முக்கிய வீதியில் ஊர்வலமாக கிராம மக்கள் அழைத்துச் சென்று மயான கரையில் இறுதி சடங்கு செய்தனர்.

தேருடன் உயிருடன் இரண்டு கோழிகளை கட்டி வைத்து ஊர்வலமாக எடுத்து சென்று இறுதிச்சடங்கு செய்து கோழிகளை பலியிட்டு புதைத்தனர். பின்னர் இறந்தவர் போல் தேரில் வந்ந ராமரை கிராம மக்கள் உயிருடன் எழுப்பி கோயிலுக்கு அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதில் மனைவியாக வேடமிட்ட கோமாளி என்ற முத்தையா என்பவர் தேர் முன்பாக அழுது கொண்டே மயானக்கரை வரை வந்ததை கிராம மக்கள் ஆச்சரியத்துடனும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இந்த உற்சவ திருவிழா 18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+