Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை போலீசுக்கே 'தண்ணி'காட்டிய பிரபு..பழிவாங்க முயற்சித்து பல்பு வாங்கி..கடைசியில் இப்படிஆகிடுச்சே!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: அபராதம் விதித்ததால் ஆத்திரம் அடைந்த இளைஞர், போலீசின் வண்டியை திருடிக்கொண்டு எஸ்கேப் ஆகி வேகமாக வந்து கொண்டிருந்தார். திண்டுக்கல் நத்தம் அருகே தனியார் பஸ் மீது மோதி விபத்தில் சிக்கியதால் பொதுமக்களிடம் வசமாக மாட்டிக்கொண்டார்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் இருந்து, திண்டுக்கல் மாவட்டம் நத்தத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இரவு 7 மணி அளவில், நத்தம் அருகே சொறிப்பாறைப்பட்டி பஸ் ஸ்டாண்டில் பயணிளை ஏற்றி இறங்குவதற்காக தனியார் பஸ் நின்றது, அப்போது பஸ்ஸில் இருந்து பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர்.

Dindigul youth was arrested as he escaped after stealing the bike of the fined policeman

அப்போது அந்த வழியாக 2 இளைஞர்கள் வந்த இருசக்கர வாகனம் வேகமாக வந்து, கண் இமைக்கும் நேரத்தில் தனியார் பஸ் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஒருவர் மயங்கி விழுந்தார். மற்றொருவர் காயம் இல்லை என்றாலும் பதறிப்போனார்.

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், பயணிகள் உடனே ஓடிச்சென்று இளைஞர்களை மீட்டு ஆசுவாசப்படுத்தினர். விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம் போலீசுக்கு சொந்தமானது என்பதை பொதுமக்கள் கண்டனர். மேலும் பைக்கின் முன்பகுதியில் சி-5, போலீஸ் என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், போலீஸாக இருக்கலாம் என்று முதலில் பொதுமக்கள் கருதினர்.

ஆனால் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களின் பேச்சு மற்றும் செயல்கள் வேறுமாதிரி இருந்ததால், அந்த இளைஞர்கள் மீது பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்களை பிடித்து வைத்துக் கொண்ட பொதுமக்கள், இதுகுறித்து நத்தம் காவல் நிலையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

விபத்தில் சிக்கிய 2 பேரிடமும் போலீசார் விசாரித்த போது தான், இந்த பைக் போலீசிடம் இருந்து திருடப்பட்ட பைக் என்பதும், விபத்தில் சிக்கிய ஒருவரின் பெயர் பிரபு (வயது 30). சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

ஞாயிறு இரவு மதுரை அய்யர்பங்களா அருகே நத்தம் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் பிரபு சென்றபோது அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரபுவின் மோட்டார் சைக்கிளை போலீசார் வழிமறித்து நிறுத்தி உள்ளார்கள்.

குடிபோதையில் இருந்ததாக கூறி பிரபுவுக்கு போலீசார் அபராதம் விதித்தனர் பிரபுவின் மோட்டார் சைக்கிள் சாவியை போலீசார் வாங்கி வைத்து கொண்டனர். மேலும் அந்த பகுதியில் நிற்குமாறு போலீசார் அவரை அறிவுறுத்தினர். அதன்பேரில் பிரபு அங்கு நீண்டநேரமாக நின்று கொண்டிருந்தார்.

Dindigul youth was arrested as he escaped after stealing the bike of the fined policeman

இதற்கிடையே அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி தணிக்கை செய்வதில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர். பிரபுவை பற்றி அவர்கள் யோசிக்கவில்லை. அப்போது நீண்ட நேரம் வாகனத்தை கேட்டு நின்று கொண்டிருந்த பிரபு தனக்கு அபராதம் விதித்த போலீசார் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தார். இதனால் போலீசாரை பழிவாங்க நினைத்தார்.

அப்போது சப்-இன்ஸ்பெக்டருக்கு போலீஸ் துறையால் வழங்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று சாலையோரத்தில் சாவியுடன் நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த பிரபு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்.
சப் இன்ஸ்பெக்டரின் பைக்கை நைசாக திருடி கொண்டு பிரபு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பினார். அங்கு நின்று கொண்டிருந்த தனது நண்பரான மதுரையை சேர்ந்த ரஞ்சித்குமாரையும் பைக்கில் ஏற்றிக்கொண்டார்.

அதன்பிறகு அவர்கள் 2 பேரும், நத்தம் அருகே சொறிப்பாறைப்பட்டி வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் தான், தனியார் பஸ் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்கு உள்ளானது. இதனால் அவர்கள் 2 பேரும் பொதுமக்களிடம் சிக்கியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனிடையே சாலையோரத்தில் நிறுத்தியிருந்த பைக்கை காணாமல் அதிர்ச்சி அடைந்த போலீசார் அங்கு நின்று கொண்டிருந்த பிரபுவையும் காணவில்லை என்பதையும் கண்டனர். இதனால் பிரபு தான் பைக்கை திருடி சென்றிருக்கக்கூடும் என்று போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து மதுரை, நத்தம் பகுதியில் உஷார்படுத்தப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் மோட்டார் சைக்கிளுடன் பிரபு சிக்கிய தகவலை நத்தம் போலீசார், மதுரை போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து நத்தம் வந்த மதுரை போலீசாரிடம் பிரபு, அவரது நண்பர் ரஞ்சித்குமாரை ஒப்படைத்தனர். மேலும் போலீஸ் துறைக்கு சொந்தமான இருசக்கர வாகனமும் ஒப்படைக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+