கரகாட்ட பெண்களுடன் ஆபாச நடனம்! சர்ச்சையில் சிக்கிய திமுக கவுன்சிலர்.. என்னமா ஸ்டெப் போடுறாரு பாருங்க
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கோவில் திருவிழாவில் திமுக கவுன்சிலர் ஒருவர் கரகாட்டம் ஆட வந்த பெண்களுடன் ஆபாசமான நடனம் ஆடியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்த நிலையில் இந்த வீடியோவை அதிமுகவினர் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பரப்பி வருகின்றனர்.
ஒரு காலத்தில் கேமரா செய்தி என்றால் அது பெரிய விஷயம் தங்கள் பேரும் புகைப்படமும் செய்தியில் வரவேண்டும் என பலரும் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் இன்று நிலைமை தலைகீழாகி விட்டது.

நவீன செல்போன் யுகத்தில் டிஜிட்டல் மீடியா வளர்ச்சியால் செல்போன் வைத்திருக்கும் அனைவருமே செய்தியாளர்கள் என்று நிலைமை ஆகிவிட்டது. மேலும் சிசிடிவி உள்ளிட்டவை வந்துவிட்ட பிறகு யாராக இருந்தாலும் பொதுவெளியில் மிக கவனமாக செயல்பட வேண்டும்..
சர்ச்சை வீடியோ: இதன் காரணமாக சில நேரங்களில் பெரிய அரசியல் பிரமுகர்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமான சம்பவங்கள் பல நடைபெற்று இருக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் திண்டுக்கல்லில் அரங்கேறி இருக்கிறது. கோவில் திருவிழாவில் நடனமாட வந்த கரகாட்ட பெண்களுடன் திமுக கவுன்சிலர் ஒருவர் ஆபாச நடன அசைவுகளுடன் ஆடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

திமுக கவுன்சிலர்: பெண்கள் குழந்தைகள் முன்னிலையில் ஒரு கவுன்சிலர் இப்படி நடனம் ஆடலாமா என அந்த வீடியோவை அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சொந்த தொகுதியான ஒட்டன்சத்திரம் தொகுதியில் தான் திமுக பிரமுகர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கோவில் திருவிழா: ஒட்டன்சத்திரம் பகுதி சிக்கமானநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட போட்டிக்காம்பட்டியின் மகா காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முதல்நாளில் கரகம் ஜோடித்தல் நிகச்சி நடைபெற்றது. இதற்காக பிரபலமான ஒரு குழுவின் கரகாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆபாச நடனம்: இதனைக் காண பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என அனைவரும் கூடி நின்றனர். அப்போது அங்கு வந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் SR பழனிச்சாமி. அனைவரையும் அதிர்ச்சி அடையும் வகையில் நடந்து கொண்டார். அவர் மது போதையில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில் கரகாட்ட பெண்களுடன் திடீரென நடனமாட தொடங்கினார் அவர்களை தொட்டு ஆபாசமான செய்கைகளுடன் நடனமாடியது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

அதிமுக கண்டனம்: இதை அடுத்து கரகாட்ட பெண்கள் முகம் சுளித்த போதும் தொடர்ந்து அவர்களை கட்டி அணைத்தபடி நடனம் ஆடினார் பழனிசாமி. இதனால் அதிர்ச்சியடைந்த அவ்வூர் பெண்கள் கிளம்பத் தொடங்கினர். தொடர்ந்து இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆளும் கட்சியில் பொறுப்பான இடத்தில் இருக்க வேண்டிய ஒரு கவுன்சிலர் இப்படித்தான் பெண்களிடம் நடந்து கொள்வாரா என அதிமுகவினர் இந்த வீடியோவை பரப்பி வருகின்றனர்.
-
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications