If your bad.. i am your dad! போஸ்டரில் விளையாடிய TVK! மொத்தமாய் தட்டித் தூக்கிய DMK! பரபர பாலிடிக்ஸ்
திண்டுக்கல்: 2021 சட்டமன்ற தேர்தலில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 571 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஐ.பெரியசாமியை விட, 2026 தேர்தலில் விஜய் ஒரு வாக்கு கூடுதல் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என போஸ்டர் ஒட்டி விளையாட்டு காட்டி வந்தனர் ஆத்தூர் தவெகவினர். இந்த நிலையில் போஸ்டர் அரசியலெல்லாம் சோசியல் மீடியாவுக்கு தான் களத்தில் எடுபடாது என காட்டும் வகையில் திமுகவினர் அதே ஆத்தூர் தொகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தினரை திமுகவில் இணைய வைத்து அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி அரசியலில் கடந்த சில நாட்களாக நடந்துவரும் சம்பவங்கள், போஸ்டர் அரசியலுக்கும் கள அரசியலுக்கும் உள்ள வேறுபாட்டை தெளிவாக காட்டுவதாகவே உள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட தற்போதைய அமைச்சர் ஐ.பெரியசாமி, அதிமுக கூட்டணியில் பாமக பொருளாளர் திலகபாமாவை எதிர்த்து களமிறங்கி, ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 571 வாக்குகள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆத்தூர் தொகுதி அரசியல்
இந்த வெற்றி வித்தியாசம் ஆத்தூர் தொகுதியில் திமுகவின் பலத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்திது. இந்நிலையில், இந்த வாக்கு வித்தியாசத்தையே ஆயுதமாக்கி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆதரவாளர்கள் ஆத்தூர் பகுதியில் போஸ்டர் அரசியலில் இறங்கினர். கடந்த தேர்தலில் ஐ.பெரியசாமி பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட, 2026 தேர்தலில் விஜய் ஒரு வாக்கு கூடுதல் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கூறி, ஆத்தூர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

தவெக போஸ்டர் சர்ச்சை
"2026-ன் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் எங்கள் தலைவரே" எனும் வாசகங்களுடன் வெளியான இந்த போஸ்டர்கள், திமுகவினரை சீண்டும் வகையில் அமைந்திருந்தன. இதனால், ஆத்தூர் தொகுதியில் அரசியல் சூழல் சற்று சூடுபிடித்தது. திமுக தரப்பிலும் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் போஸ்டர் சண்டை ஆரம்பமானது. திமுக இளைஞரணியைச் சேர்ந்த சிலர், "ஆத்தூர் தொகுதியில் எங்கள் அமைச்சரை எதிர்த்து நிற்கும் தவெக வேட்பாளர் டெபாசிட் வாங்கினால் நான் சேலை கட்டிக்கிறேன்" என சவாலான வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.

திமுக பதிலடி
இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, அதற்கு பதிலடியாக தவெக ஆதரவாளர்கள் விஜயின் குரலை இணைத்து "I am waiting" என்ற வாசகத்துடன் வீடியோக்களையும் பகிர்ந்தனர். ஆனால், இந்த போஸ்டர் மற்றும் சமூக ஊடக அரசியலுக்கு முற்றிலும் மாறான ஒரு அரசியல் நகர்வை திமுக களத்தில் நிகழ்த்தியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் திமுகவினர் நேரடியாக மக்களைச் சந்தித்து வருகின்றனர். இதன் மூலம் கட்சியின் கட்டமைப்பை மீண்டும் உறுதி செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் திமுக இணைப்பு
அதே நேரத்தில், ஆத்தூர் தொகுதியில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். இந்த நிகழ்வு தவெக தரப்பில் பெரிய அதிர்ச்சியை உருவாக்கி உள்ளதுடன், அரசியலுக்கு ஒரு பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது. சோஷியல் மீடியாவில் வைரலாகும் போஸ்டர்கள், கோஷங்கள், வீடியோக்கள் எல்லாம் தேர்தல் களத்தில் வெற்றி தரும் என்ற எண்ணத்துக்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
ஐ பெரியசாமி ஆத்தூர்
ஆத்தூர் தொகுதியில், தவெக போஸ்டர் அரசியலால் உருவாக்கப்பட்ட பரபரப்பை, ஒரே நாளில் கள அரசியலால் திமுக முறியடித்துள்ளது. தவெகவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திமுகவில் இணைந்தது, "போஸ்டர் அரசியல் சோசியல் மீடியாவுக்குத்தான்; களத்தில் அது எடுபடாது" என்பதை நிரூபிப்பதாக திமுகவினர் கூறுகின்றனர். ஒருபுறம், போஸ்டர் ஒட்டி அரசியல் செய்த தவெக ஆதரவாளர்கள்; மறுபுறம், அமைப்புசார் அரசியலால் நேரடியாக தொண்டர்களை தன் பக்கம் இழுத்த திமுக என தேர்தல் களம் பரபரப்பாகி வருகிறது.












Click it and Unblock the Notifications