இறங்கி அடிக்கும் திமுக..ஜம்ப் அடித்த அதிமுக ர.ர.க்கள்! ’நத்தம்’ தொகுதியில் தட்டித் தூக்கிய சக்கரபாணி
திண்டுக்கல்: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் அரசியல் கட்சிகளில் இருக்கும் முக்கிய புள்ளிகள் தொடங்கி, லோக்கல் நிர்வாகிகள் வரை தங்கள் கட்சிக்கு இழுக்கும் பணிகள் சூடு பிடித்துள்ளன. குறிப்பாக அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் தொடங்கி உள்ளூர் நிர்வாகிகள் வரை திமுகவுக்கு இழுக்கும் வேலையை தொடங்கி இருக்கின்றனர் அமைச்சர்கள். அந்த வகையில் அதிமுகவின் முக்கிய புள்ளியான நத்தம் விஸ்வநாதன் தொகுதியில் இருந்து கொத்தாக அதிமுகவினர் திமுகவில் இணைந்து இருக்கின்றனர். 2016 சட்டமன்ற தேர்தலை போல இந்த முறையும் நத்தம் தொகுதியை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கி இருக்கிறார் அமைச்சர் சக்கரபாணி.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றன. குறிப்பாக ஆளுங்கட்சியான திமுக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் வேளையை துவக்கி விட்டது என சொல்லலாம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கேஎன் நேரு, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் குழு ஆரம்பிக்கப்பட்டு கூட்டணி பேச்சு வார்த்தைகள், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் 200 தொகுதிகள் என டார்கெட்டை ஃபிக்ஸ் செய்துள்ளதால் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.

திமுக திட்டம்
ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளில் வெற்றியை தக்க வைப்பதோடு, வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் திமுகவினர் எண்ணமாக இருக்கிறது. இதற்காக சிறப்பு கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவர் ஆன ஸ்டாலின். அது மட்டும் அல்லாமல் அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் சீனியர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், முன்னால் எம்எல்ஏக்கள் மட்டுமல்லாது உள்ளூர் நிர்வாகிகளாக இருந்தாலும் அவர்களை திமுகவில் இணைய வைக்க வேண்டும் என்ற உத்தரவும் போடப்பட்டிருக்கிறது.
2026 தேர்தல்
அதை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அதிமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதற்கு பலரும் கிடைத்திருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் அதிமுகவின் முக்கிய புள்ளிகளான மைத்ரேயன், அன்வர் ராஜா, மருது அழகராஜ், முன்னாள் எம்எல்ஏ சின்னச்சாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலர் திமுகவில் இணைந்திருக்கின்றனர். இதுமட்டும் இல்லாமல் கிளைக் கழக நிர்வாகிகள் தொடங்கி திமுகவில் இணையும் படலமும் தொடங்கி வருகிறது.
அமைச்சர் சக்கரபாணி
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட திண்டுக்கல்லை சேர்ந்த திமுகவினர் கொத்தாக அதிமுகவில் இணைந்தனர். இந்த நிலை அடுத்த அதிரடியை ஆரம்பித்திருக்கிறார் திண்டுக்கல்லை சேர்ந்த அமைச்சரான சக்கரபாணி தற்போது மாவட்ட செயலாளராக இருக்கும் அவர் நத்தம் தொகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். நத்தம் தொகுதியை பொருத்தவரை அதிமுக துணை பொது செயலாளரான நத்தம் விஸ்வநாதன் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
நத்தம் விஸ்வநாதன்
தொடர்ந்து பல தேர்தல்களில் அவர் வென்ற நிலையில் 2016 சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் ஐபி பெரியசாமியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்போது திமுகவின் ஆண்டியம்பலம் வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மீண்டும் 2021ல் நத்தம் தொகுதிக்கு திரும்பினார் விஸ்வநாதன். இதற்கிடையே ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற போது நத்தம் விஸ்வநாதனின் மைத்துனரான ஆர்விஎன் கண்ணன் ஒன்றிய சேர்மேனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக 15 வார்டுகளிலும் 5 தொகுதிகளில் திமுகவும் வெற்றி பெற்றிருந்தது.
அதிமுக நிர்வாகிகள்
இதற்கிடையே அதிமுகவின் ஐந்து கவுன்சிலர்கள் திமுகவுக்கு தாவினர். இதனால் பத்துக்கு பத்து என்ற அளவில் திமுக அதிமுக சம பலத்துடன் இருந்தது. ஆனால் அதற்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பதவிக்காலம் நிறைவடைந்ததால் கண்ணனின் பதவி தப்பியது. இருந்த போதும் நத்தம் தொகுதியை குறி வைத்து பணியாற்றி வரும் அமைச்சர் சக்கரபாணி தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளை இழக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதற்கு பலரும் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே அதிமுக கவுன்சிலர்கள், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் திமுகவுக்கு தாவி இருக்கும் நிலையில் தற்போது நத்தம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான அதிமுகவினர் திமுகவில் இணைந்து நத்தம் விஸ்வநாதனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

நத்தம் தொகுதி
அதே நேரத்தில் தற்போது சென்றிருக்கும் நிர்வாகிகள் எல்லாம் பெரிய அளவில் யாருக்கும் தெரியாது. உள்ளூரில் உறுப்பினர் அட்டை வைத்திருந்தவர்களை திமுகவினர் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதனால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்கின்றனர் அதிமுகவினர். அதே நேரத்தில் ஒவ்வொரு ஓட்டும் திமுகவுக்கு முக்கியம். அதனால் எந்த கட்சியில் எந்த பதவியில் இருந்தாலும் அவர்களை திமுகவுக்கு அழைத்துச் செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமைச்சர் சக்கரபாணியும் தீவிரமாக அதிமுகவினரை திமுகவுக்கு இழுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனால் 2026 நத்தம் தொகுதியை திமுக கைப்பற்றும் என நம்பிக்கையை தெரிவிக்கின்றனர் திமுகவினர்.
-
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்?












Click it and Unblock the Notifications