கடை பூரா தக்காளி கூடைகள்.. வாங்க ஆளில்லை.. திண்டுக்கல்லில் மாத்தி யோசிச்ச வியாபாரி!
திண்டுக்கல்: ஆடி தள்ளுபடின்னா துணிக் கடைக்கும் நகைக் கடைகளுக்கும் மட்டும்தான் கொடுக்க வேண்டுமா என்ன? அதிக விலைக்கு விற்பனையாகும் தக்காளிக்கு குடுக்கலாமேனு மாத்தி யோசித்துள்ளார் காய் கடை உரிமையாளர்!
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தக்காளியின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தக்காளி அதிகம் விலையும் மாநிலங்களில் தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வரத்து குறைந்து விலை அதிகரித்துவிட்டது.

தமிழகத்தில் 500 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ 60 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் இவற்றை வாங்க நீண்ட வரிசையில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதாவது ரேஷன் கடைகள் திறப்பதற்கு முன்பே காத்திருக்க வேண்டும் என்பதால் மக்கள் பலர் இந்த கடைகளுக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை.
இந்த நிலையில் தற்போது தினந்தோறும் ரூ 10, 20 என தக்காளி விலை குறைந்தாலும் முன்பு போல் தாராளமாக பயன்படுத்தும் அளவுக்கு இதன் விலை இல்லை. இந்த நிலையில் திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் ஒரு புதிய யோசனையை தக்காளி வியாபாரிகள் கையாண்டு வருகிறார்கள். இங்கு சில்லறையாவும் மொத்தமாகவும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
கிலோ தக்காளியே 120 முதல் 200 வரை விற்பனை செய்யப்படுவதால் விலை குறையும் வரை தக்காளியே பயன்படுத்தாமல் ஏதாவது செய்து சாப்பிட மக்கள் தயாராகிவிட்டனர். இதனால் குறைந்த அளவு லாரிகளில் வந்த தக்காளிகளும் வீணானது. இதனால் என்ன செய்யலாம் என யோசித்த காய்கறி விற்பனையாளர்கள் மாத்தி யோசித்து ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் சென்ற வாரம் திண்டுக்கல் மொத்தக் கடை உரிமையாளர் 5 டன் தக்காளிகளை ரூ 60 க்கு விற்பனை செய்தார். ஆடி மாதம் என்றாலே துணிக்கடைகளுக்கும் நகைக் கடைகளுக்கும் தள்ளுபடி வழங்குவதை கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் திண்டுக்கல்லில் முதல் முறையாக கிலோ தக்காளி ரூ 60 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
8 டன் தக்காளிகளை மொத்தமாக வியாபாரம் செய்யாமல் ஒரு நபருக்கு இரண்டு கிலோ வீதம் தக்காளிகளை ஆடி மாத தள்ளுபடியாக குறைந்த விலைக்கு விற்பனை செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் தக்காளி விலை 50 ரூபாய்க்கு கீழ் விற்பனையாகும் வரை ஆடி மாதத்தில் வாரம் ஒரு முறை பொது மக்களுக்காக ரூ 60 க்கு விற்பனை செய்கிறோம்.
இதனால் பொதுமக்கள் காலை 5 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தக்காளி வாங்கி செல்கிறார்கள். இந்த விலைக்கு வாரம் ஒரு முறை விற்கப்படும். இதை பொதுமக்கள் வாங்கி பயன்பெறுகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications