₹8000 கூப்பனால் மகிழும் மக்கள்.. நல்ல தலைவருக்கு இது அடையாளம்! விஜயை வேற மாதிரி வறுத்தெடுத்த ரோகிணி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம்... அரசியல் சூழலை சூடுபிடிக்க வைத்துள்ளது.. திமுக கூட்டணிக்கு ஆதரவாக நடிகை ரோகிணி பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.. குிற்பபாக மு.க.ஸ்டாலின் அரசு நலத்திட்டங்கள் குறித்து அவர் கூறிய விஷயங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.. அதே நேரத்தில் ஒன்றிய அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் மீது அவர் எடுத்த நிலைப்பாடும் அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ளது.. விஜய் மற்றும் தவெக குறித்து ரோகிணி எழுப்பிய கேள்விகளும் இந்த பிரசாரத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது..
திண்டுக்கல் மாவட்டம், பழநி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை ஆதரித்து, கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் நேற்று பிரசார கூட்டம் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் ரோகிணி பேசும்போது, "கொடைக்கானலில் நிறைய மினரல், தாதுக்கள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இங்குள்ள தாதுக்களை கொள்ளையடிப்பதற்கு ஒன்றிய அரசு திட்டமிடுவார்கள். அதை நாம் தடுக்க ஒன்றிய அரசின் கூட்டணி கட்சிகளை புறக்கணிக்க வேண்டும்.
8000 கூப்பன் திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சிக்கு அவர் கொண்டு வந்த திட்டங்களே சாட்சியாக உள்ளது. என்னை நெகிழ வைத்த மிகவும் கவர்ந்த திட்டம் காலை உணவு திட்டம். அதேபோல் மாணவ, மாணவிகளின் உயர்கல்வி கனவை நனவாக்கியது புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டங்கள். இவ்வளவு நல்ல திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி மீண்டும் 5 ஆண்டுகள் தொடர்வதுதான் சிறந்தது.
பிளவு வாதத்தை நுழையவிடக் கூடாது. அதற்கு திமுக கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும்.. நான் எங்கே ஓட்டு கேட்டு சென்றாலும், கேட்காதீங்க எங்கள் ஓட்டு தோழருக்குதான் என்கிறார்கள்.. எங்கே போனாலும் திமுகவின் மகளிர் உரிமைமத்ரெதாகை, காலை உணவுத் திட்டத்தை பற்றி பேசுகிறார்கள்.. அதிலும், 8000 கூப்பன், மகளிருக்கு 2000 உரிமைத்தொகையை உயர்த்தி தந்துள்ளதை அதிகமாக மக்களிடம் என்னிடம் சொல்கிறார்கள். அதைதான் மக்கள் எங்கே போனாலும் பேசுகிறார்கள்..
தவெக விஜய் பேச்சு
ஒருசிலர் கம்யூனிசம் சித்தாந்தம் சரியில்லை என்கிறார்கள்.. அப்படி சொல்பவர்கள், அந்த சித்தாந்ததம் என்னவென்று தெரிந்துதான் பேசுகிறார்களா தெரியவில்லை.. எளியவர்கள் பக்கம் நிற்பதே கம்யூனிச சித்தாந்தம், இதை எப்படி தவறு என்று சொல்வார்கள்?
நடிகர் விஜய்யை பொறுத்தவரை, அவர் செல்லும் இடங்களில் கூட்டம் சேருகிறது. நான் ஒரு சாதாரண நடிகை. ஆனால் எனக்கே கூட்டம் வருகிறது.. காரணம், சினிமா மோகம் என்பது அரிதான வாய்ப்பு.. அதனால் விஜய்க்கு கூட்டம் வரலாம்.. ஆனால், ஒரு நல்ல தலைவர் என்பது விஜய்யின் ஒரு பேச்சின் மூலமும் எனக்கு தெரியவில்லை.. எந்த தொகுதிக்கு சென்றாலும், அந்தந்த தொகுதியின் பிரச்சனைகளை அவர் பேசுவதில்லை.
நடிகை ரோகிணி விமர்சனம்
அதேபேல தவெகவின் வேட்பாளர்கள் யாருமே விவாத மேடைகளில் கலந்து கொண்டதில்லை.. தொகுதி பிரச்சனைகளையும் அவர்கள் பேசுவதில்லை. மற்ற கட்சி வேட்பாளர்கள் அனைவருமே இதுபோன்ற விவாத மேடைகளில் கலந்து கொண்டு, விவாதிக்கிறார்கள்.. அப்படியானால் தங்கள் தொகுதி பற்றின புரிதல் அவர்களுக்கு உள்ளது.. ஆனால் தவெக வேட்பாளர்களோ கலந்து கொண்டதில்லை என்றால், அவர்களுக்கு தங்கள் தொகுதி பற்றின புரிதலே இல்லை என்றுதானே அர்த்தம்? " என்று கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications