கமல் ஆன்டி இந்தியன் அல்ல.. ஆன்டி மனித குலம்.. எச் ராஜா பரபரப்பு விமர்சனம்
கொடைக்கானல்: கமல்ஹாசன் ஆன்டி இந்தியன் அல்ல. அவர் ஆன்டி மனிதகுலம் என பாஜக தேசிய உறுப்பினர் எச் ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
இதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து பாஜக தேசிய குழு உறுப்பினரும் சிவகங்கை எம்பி தொகுதி வேட்பாளருமான எச் ராஜா விமர்சனம் செய்துள்ளார். அவர் கொடைக்கானலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

கோட்சே
அப்போது அவர் கூறுகையில் விஸ்வரூபம் படம் வெளியாகும் போது கமல்ஹாசனுக்கு மிரட்டல் வந்தது. பின்னர் காலில் விழுந்து படத்தை வெளியிடும்படி கெஞ்சினஆர். அத்தகைய கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதி என்றும் கோட்சேவை தரக்குறைவாகவும் விமர்சிக்க தகுதியற்றவர்.

இந்துக்கள்
பள்ளிக்கூடத்துக்கே செல்லாமல் இடைநின்ற கமல்ஹாசனுக்கு வரலாறு எப்படி தெரியும். அவருக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். 100 ஓட்டுகளையாவது வாங்க வேண்டும் என்பதற்காக கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதி என கூறியுள்ளார்.

ஆன்டி மனிதகுலம்
கமல்ஹாசன் ஆன்டி இந்தியன் அல்ல. அவர் ஆன்டி மனிதகுலம். கமலின் இந்து தீவிரவாதி குறித்த கருத்துக்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் வைரமுத்துவுக்கு எழுந்தது போல் கமலுக்கு எதிர்ப்பு உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் எச் ராஜா.

பரபரப்பு
இவர் எப்போதும் ஆன்டி இந்தியன் என்ற வார்த்தையை பயன்படுத்துவது வழக்கம். அதாவது தேச நலனுக்கு எதிரானவர், இந்தியர்களுக்கு எதிரானவர் என்ற பொருளில் கூறுவார். ஆனால் கமல்ஹாசனை மனிதகுலத்துக்கே எதிரானவர் என கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications