Palani: ரூ 100 கோடி மதிப்புள்ள பழனி நிலம் ரூ 2 கோடிக்கு கேட்டதே அதிக விலை! வெளியான பத்திரத்தில் பகீர்

Subscribe to Oneindia Tamil

பழனி: பழனி தண்டாயுதபாணி மடத்திற்கு சொந்தமான ரூ 100 கோடி நிலம் விற்பனை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து வெளியான கிரைய பத்திரத்தின் நகல் , அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனி மலை அடிவாரத்தில் உள்ள 1 ஏக்கர் 40 சென்ட் நிலம், கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமானது. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை ரூ 2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட தகவல் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Palani Temple

கோயிலுக்குச் சொந்தமான நிலம் எப்படி தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது. அதிலும் பழனி சார் பதிவாளர் பதிவு செய்ய முடியாது என கூறி அவர் விடுப்பில் சென்றதை அடுத்து கொடைக்கானலில் இருந்து ஒரு சார்பதிவாளரை வரவழைத்து அவசர அவசரமாக பதிவு செய்ய வேண்டியன் அவசியம் என்ன என்பது குறித்து கேள்வி எழுந்தது.

அதிலும் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷின் உறவினர்கள்தான் இந்த நிலத்தை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை ரமேஷ் மறுத்திருந்தார். மேலும் பொய் தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இது போல் அமைச்சர் மீது பொய் தகவல்களை பரப்பியதாக புகாரின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த பத்திரப்பதிவை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கு குறித்து கோயில் நிர்வாகத்தினர், சார் பதிவாளர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பத்திரப்பதிவு நடந்த போது சார் பதிவாளர் அலுவலகத்திற்கு யாரெல்லாம் வந்தார்கள் என்பது குறித்த சிசிடிவி காட்சிகளையும் அவர்கள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பழனி கோயில் நில கிரைய பத்திரத்தின் நகல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த பத்திரத்தில் "ரூ 100 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ 2 கோடிக்கு கேட்டுள்ளதே அதிக விலை" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் "பழனி தண்டபாணி மடம், தனியார் அறக்கட்டளை" என்றும் அந்த பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தண்டாயுதபாணி மடம் தனியார் அறக்கட்டளை, நிலங்கள் மூலம் வருவாய் ஈட்டு தர்மகாரியங்களை செய்வது வழக்கம் என பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் ரூ 100 கோடி மதிப்பிலான நிலம் மூலம் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. ரூ 100 கோடி நிலத்தை ரூ 2 கோடிக்கு கேட்டுள்ளதே அதிக விலை என்றும் அந்த கிரைய பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலத்தை வாங்குவதற்கு 2 கோடிக்கான பணமானது ரூ 50 லட்சம் வீதம் 4 காசோலைகளாக வழங்கப்பட்டதாம். கடந்த மார்ச் 27ஆம் தேதி கையெழுத்தான விற்பனை பத்திரம், ஜூன் 6ம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+