திண்டுக்கல் சீனிவாசனுக்கு செக்.. மகனுக்காக இறங்கிய ஐ.பெரியசாமி.. கரை சேர்வாரா ஐ.பி.செந்தில்குமார்?
திண்டுக்கல்: சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே இருக்கிறது. இதனால் திமுக மற்றும் அதிமுக ஆகிய வேட்பாளர்களின் பிரச்சாரமும், தேர்தல் செயல்பாடுகளும் உச்சத்தில் இருக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தேர்தல் முடிவாக திண்டுக்கல் தொகுதி மாறி இருக்கிறது. ஏனென்றால் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் களமிறங்கி இருக்கிறார்.
மறுபக்கம் திமுகவின் அடையாளமாக இருக்கும் ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில்குமார் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த முறை பழனி தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஐ.பி.செந்தில்குமாரை இம்முறை முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டே திண்டுக்கல் தொகுதிக்கு மாற்றி இருக்கிறார். அதேபோல் பழனி தொகுதியை சிபிஎம் கட்சிக்கு கொடுத்துள்ளார்.

இது திண்டுக்கல் மாவட்டத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஏனென்றால் 2021 சட்டசபைத் தேர்தலில் திண்டுக்கல் சீனிவாசன் சுமார் 18,600 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதி அது. அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் தான் அதிமுகவுக்கு அடையாளமாக இருக்கிறார். நத்தம் விஸ்வநாதனின் அரசியல் செயல்பாடுகள் குறைந்துவிட்டன.
இதன் காரணமாகவே திண்டுக்கல் சீனிவாசனை வீழ்த்திவிட்டால், திமுக கைகளுக்கு மொத்த மாவட்டமும் வந்துவிடும் என்று கணக்கு போடப்பட்டுள்ளது. அதேபோல் ஐ.பெரியசாமிக்கு வயதாகிவிட்டதால், அவரின் இடத்தில் அவரது மகனை கொண்டு வர திமுக தலைமை கருதுவதாக தெரிகிறது. அதற்கேற்ப பலமான வேட்பாளரை வீழ்த்திவிட்டு வந்தால், அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்ற உத்தரவாதமும் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் திண்டுக்கல் களத்தில் திமுகவினர் உற்சாகத்துடன் வலம் வருகின்றனர். மறுபக்கம் திண்டுக்கல் சீனிவாசன் இந்த தேர்தலில் தோல்வி அடைந்தால், அவரின் அரசியல் எதிர்காலமே சிக்கலாகும். இதனை கணக்கில் கொண்டு திண்டுக்கல் தொகுதியில் கோலோச்சிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்.
ஐ.பி.செந்தில்குமாருக்காக அவரது ஒட்டுமொத்த குடும்பமும் களமிறங்கி இருக்கிறது. 2016 மற்றும் 2021 ஆகிய தேர்தலில் திண்டுக்கல் சீனிவாசன் 90 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளார். ஆனால் இம்முறை திமுகவின் பவர் சென்டரான ஐ.பெரியசாமி குடும்பம் நேரடியாக களமிறங்கி இருக்கிறது. அதேபோல் தவெக பிரிக்கும் வாக்குகளும், திமுகவுக்கு சாதகமாக மாறும் என்று பார்க்கப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications