வித்யா உடன் கள்ளக்காதல்.. மணியை கண்டித்த மனைவி.. கோயிலில் விஷம் குடித்து ஜோடியாக தற்கொலை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கள்ளக்காதல் ஜோடி திருமலைக்கேணி முருகன் கோயிலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே செங்குறச்சி ஊராட்சியில் பிரசித்தி பெற்ற திருமலைக்கேணி முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் மக்கள் அதிக அளவு வருவார்கள். குடும்பம் குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த கோயிலில் நேற்று காலை ஒரு காதல் ஜோடி
கிரிவலப்பாதையில் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலீசார் , 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

யார் இவர்கள்
காதலியின் உடல் அருகே கிடந்த பையை போலீசார் எடுத்து பார்த்ததில் அதில் ஆதார் மற்றும் ரேஷன் கார்டு ஒன்று இருந்தது. அந்த கார்டில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீரேத்தான் பகுதியை சேர்ந்த ஜெயசெந்தில் என்று இருந்தது. அதன் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தற்கொலை
விசாரணையில் இறந்த பெண், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீரேத்தான் பகுதியை சேர்ந்த ஜெயசெந்தில் மனைவி வித்யா (வயது 27) என்பதும் அவருடன் இறந்த நபர், வாடிப்பட்டி அருகே உள்ள தாதன்பட்டியை சேர்ந்த சப்பாணி மகன் மணி (32) என்பதும் தெரிய வந்தது. விசாரணையில் இருவரும் கள்ளக்காதலர்கள் என்பதும் தெரியவந்தது.

போலீஸ் தகவல்
இது தொடர்பாக போலீசா கூறுகையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதன் பட்டியைச் சேர்ந்தவர் மணி (32). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். மணிக்கும் வடமதுரையில் உள்ள சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார், இவருக்கும் வித்யாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

விஷம் குடித்த ஜோடி
வித்யாவுக்கு ஜெயசெந்தில் என்ற கணவன், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் வித்யா மற்றும் மணியின் கள்ளக்காதல் விவகாரம் மணியின் மனைவிக்கு தெரிந்ததும் வாடிப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ஜெயசெந்திலும் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கள்ளக்காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமலைக்கேணி முருகன் கோவிலுக்கு வந்தனர். அங்கு இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடந்த இந்த தற்கொலை சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications