28,000 கிமீ வேகம்.. கொடைக்கானல் மேல் பறந்து சென்ற சர்வதேச விண்வெளி நிலையம்! எப்படி இருக்கு பாருங்க!
திண்டுக்கல்: பூமியில் இருந்து 400 கிலோமீட்டர் உயரத்தில் மணிக்கு 28,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி மையம் தமிழ்நாட்டின் கொடைக்கானலுக்கு மேலே பறந்து சென்றது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையதளத்தில் பரவி வருகிறது.
நம் பூமிக்கு மேலே விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station) சுற்றி வருகிறது. பூமியின் தாழ்வான சுற்றுவட்டப்பாதையில் இந்த சர்வதேச விண்வெளி நிலையம் நிலைநிறுத்தப்பட்டு பூமியை சுற்றி வருகிறது.

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், கனடா உள்ளிட்ட 5 நாடுகளின் விண்வளெி ஆய்வு நிறுவனங்கள் சேர்ந்து இதனை உருவாக்கி உள்ளன. இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்கள், வீராங்கனைகள் தங்கி ஆராய்ச்சிகளையும், ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது நம் நாட்டின் சுபான்ஷூ சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த சர்வதேச விண்வெளி நிலையம் பூமிக்கு மேலே 400 கிலோமீட்டர் உயரத்தில் மணிக்கு 28,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது. இது ஒரு முறை பூமியை சுற்றுவதற்கு 90 நிமிடங்கள் என ஒருநாளைக்கு 16 முறை சுற்றுகிறது. இதனால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள், தினமும் 16 முறை சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் பார்க்க முடியும்.
இதற்கிடையே தான் நாசா முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. அதாவது கடந்த 6ம் தேதி முதல் வரும் 12ம் தேதி வரை நம் நாட்டில் இருந்து பொதுமக்கள் வெறும் கண்களால் சர்வதேச விண்வெளி நிலையத்தை பார்க்கலாம் என்று அறிவித்தது. அதன்படி தற்போது பல இடங்களில் விண்வெளி நிலையத்தை மக்கள் வெறும் கண்களால் பார்த்து வருகின்றனர்.
We captured the ISS above our iconic building at KSO. Spot the ISS (International Space Station) for the coming days at your location.
— Kodaikanal Observatory (@kodaiastronomy) July 7, 2025
Source: App ISS Detector
YT: https://t.co/Nyhlyg1HCv@IIABengaluru @IndiaDST #ISS #subhanshusukhla #kodaikanal pic.twitter.com/daWUi928Os
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான கொடைக்கானலில் சர்வதேச விண்வெளி நிலையம் தெரிந்துள்ளது. கொடைக்கானலில் வரலாற்று சிறப்புமிக்க சூரிய வான் ஆய்வகம் உள்ளது. இந்த ஆய்வகத்தில் இருந்து கொண்டு தான் கொடைக்கானலின் மேல்புறம் சர்வதேச விண்வெளி நிலையம் மின்னல் வேகத்தில் பறந்து சென்றபோது வீடியோ மற்றும் போட்டோ எடுக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications