டிமிக்கி கொடுத்த ஜஸ்டின் மணிகண்டன்.. கொடைக்கானலில் லாக் செய்த சிபிசிஐடி! சிக்கியது எப்படி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: பழனி ரூ.100 கோடி மட நில மோசடி வழக்கில் நிலத்தை மோசடியாக பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முன் ஜாமீனை ரத்து செய்த நிலையில், ஜஸ்டின் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜஸ்டின் மணிகண்டன் கைதானது எப்படி என்பது குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான, ரூ.100 கோடி மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6ஆம் தேதி ரூ. 2 கோடிக்கு பத்திரபதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக பழனி அடிவார காவல் நிலையம் சார்பில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Justin Manikandan

பின் ஜூலை 15ஆம் தேதி தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. பின் திண்டுக்கல் சிபிசிஐடி போலீசார் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மடத்து வாரிசுதாரர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளம் சேர்ந்த வெள்ளத்துரை, பழனி புதூரைச் சேர்ந்த சேதுபதி, பத்திரம் தயாரித்து கொடுத்த வழக்கறிஞர் அன்ருதீன், இடைத்தரகராக செயல்பட்ட ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

பழனி கோவில் நிலம்

மேலும் இவ்வழக்கில் தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், இடத்தை வாங்கிய வெள்ளத்துரை சேதுபதி வழக்கறிஞர் அன்வர்தின் ஆகியோரை கடந்த 29ம் தேதி சிபிசிஐடி போலீசார் கைது செய்து திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தினர். 4 பேரையும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மேஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரையும் சிபிசிஐடி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

சிபிசிஐடி

பின் திண்டுக்கல் நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 4 பேரையும் 05.08.26 மதியம் முதல் வெள்ளி 07.08.26 மதியம் வரை 3 நாட்கள் சிபிசிஐடி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய நிபந்தனையுடன் நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கு தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மூலம் முன்ஜாமீன் பெற்றுள்ளார். இந்த ஜாமீன் உத்தரவு ஆகஸ்ட் 3ஆம் தேதி முடிவடைந்தது.

ஜஸ்டின் மணிகண்டன்

இந்த நிலையில் நேற்று ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் பத்திர எழுத்தாளர் ஜெயபிரகாஷ் ஆகிய இருவரின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதி ராஜசேகர், இருவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று திண்டுக்கல் சிபிசிஐடி போலீசார் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை கொடைக்கானலில் பதுங்கி இருந்த நிலையில் அவரை கைது செய்து திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

தலைமறைவு

இடைத்தரகர் மற்றும் பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் தலைமறைவு ஆகியுள்ளார். ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஜெயபிரகாஷ் வீட்டில் காலை முதல் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதே நிலையில் அவரது மனைவி செண்பகமதி உட்பட 8 நபர்களிடம் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் 4 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது வருகிறது.

ஜஸ்டின் மணிகண்டன் கைது

இந்நிலையில், இந்த நிலையில் ஜஸ்டின் மணிகண்டன் கைது செய்யப்பட்டது எப்படி? என்பது குறித்தான தகவல் வெளியாகி இருக்கிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட உடனேயே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை அனுகிய ஜஸ்டின் மணிகண்டன் முன் ஜாமீன் பெற்றிருந்தார். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 6 நாட்களாக திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆசராகி இருந்தார்.

முன் ஜாமீன் ரத்து

இந்த நிலையில் விசாரணையின் போது போலீசார் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு தெரியவில்லை - மறந்து விட்டது என பதிலளித்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜஸ்டின் மணிகண்டனின் ஜாமீன் மனு மீதான விசாரணை வந்தபோது ஜஸ்டின் மணிகண்டன் தொடர்பான ஏராளமான ஆவணங்கள், அவர் முறைகேடுகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக சிபிசிஐடி போலீசார் கூறியுள்ளனர்.

கைதானது எப்படி?

விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காததால் அவரை கைது செய்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டு நீதிமன்றம் அவரது முன் ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என சிபிசிஐடி கோரியுள்ளது. இதனையடுத்து நீதிமன்றம் அவரது ஜாமீனை ரத்து செய்த தகவலை கேட்டதும் ஜஸ்டின் மணிகண்டன் தலைமறைவாகியுள்ளார். ஒட்டன்சத்திரம், பழனி, திண்டுக்கல் என பல பகுதிகளில் சுற்றிய நிலையில் வேறு ஒரு எண்ணில் இருந்து உறவினர்களிடம் பேசியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அந்த எண்ணை ட்ரேஸ் செய்த போலீசார் கொடைக்கானல் பகுதியில் வைத்து ஜஸ்டின் மணிகண்டனை கைது செய்துள்ளனர் என சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+