Karthigai Deepam: கார்த்திகை தீப பெருவிழா.. பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், செவ்வாய்க்கிழமையான நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு பழனி மலை முருகன் கோயில். இந்தக் கோயிலில் தீபக் காா்த்திகை பெருவிழா காப்புக் கட்டுடன் கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு, மலைக்கோயிலில் நாள்தோறும் மாலை வேளையில் சண்முகாா்ச்சனை, சண்முகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம். தீபாராதனை, சின்னக்குமாரசாமி தங்கச்சப்பரத்தில் யாகசாலை புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பரணி தீபம்
நேற்று மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மூலவா் சந்நிதியில் பரணி தீபம் கொண்டு செல்லப்பட்டு, தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 6.45 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் உட்பிரகார உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 7.30 மணிக்கு தங்கரத புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று காலை 4 மணிக்கு கோயிலின் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, சாயரட்சை பூஜை, சண்முகாா்ச்சனை, சண்முகா் தீபாராதனை ஆகியவை நடைபெறவுள்ளது. பின்னா், யாகசாலை பூஜைக்கு சின்னக்குமாரசாமி சா்வ அலங்காரத்துடன் தங்கமயில் வாகனத்தில் மாலை 4.45 மணிக்கு அருள்பாலிப்பாா்.
கார்த்திகை தீபம்
மாலை 6 மணிக்கு மேல் சிவாச்சாரியாரால் கோயில் முன்பு உள்ள தீபஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பனை, தென்னை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப் பனையில் எண்ணெய், நெய் ஊற்றப்பட்டு கொளுத்தப்படும்.
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, இன்று தங்கத் தோ் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் குடமுழுக்கு அரங்கம் நுழைவாயில் தற்காலிகமாக அடைக்கப்படும். 2 மணி முதல் 6 மணி வரை பக்தா்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. 6 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications