கொடைக்கானலில் கொட்டும் மழை! சப்தமுடன் ஆர்ப்பரிக்கும் அருவி! சாலைகளில் வெள்ளநீரால் மக்கள் அவதி

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் நேற்று முதல் கனமழ பெய்து வருவதால் அங்குள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் சாலைகளிலும் வெள்ளம் போல் தண்ணீர் ஆர்ப்பரிக்கிறது.

நீர் வழிப் பாதைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பெருமாள்மலை அருகே உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலத்தின் மீதும் சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

Kodaikanal rain

மேலும், கொடைக்கானல்-வத்தலகுண்டு பிரதான மலைச்சாலையில் செண்பகனூர் அருகே மண் சரிவு ஏற்பட்டதுடன், உயர் அழுத்த மின்கம்பமும் சாய்ந்தது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுவதும், சாலைகளில் மண் சரிவு ஏற்படுவதும் தொடர்கிறது. பிரதான சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன.

வடிகால் வசதிகள் முறையாகப் பராமரிக்கப்படாததால் குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம்போல் புகுந்து செல்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலைகளில் ஏற்பட்ட மண் சரிவை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கொடைக்கானலில் உள்ள நீர் நிலைகள் அனைத்திலும் தண்ணீர் அதிகம் காணப்படுகிறது.

சுங்கச்சாவடி அருகே செண்பகனூர் பேருந்து நிறுத்த பகுதிக்குச் செல்லும் நெடுஞ்சாலையோரத்தில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் அதே பகுதியில் மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. இதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சாலைகளில் வெள்ள நீர், மண் சரிவு, மரங்கள் விழுந்தன உள்ளிட்ட காரணங்களால் பிரதான சாலைகளில் சுற்றுலா வாகனங்களும் பொதுமக்களின் வாகனங்களும் சுமார் 2 மணி வரை வரிசையில் காத்திருந்தன.

கொடைக்கானல் டம்டம்பாறை அருகே உள்ள எலிவால் அருவி எனப்படும் தலையாறு அருவியில் தண்ணீர் அதிக அளவு ஆர்ப்பரித்து கொட்டியது. இதை சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர்.

முக்கிய சாலைகள் இரண்டாக பிளந்துள்ளதால் அந்த பகுதி கிராம மக்கள் கடும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர். போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் சாலையில் நடந்து கூட செல்ல முடியவில்லை. பெரியகுளத்திற்கு செல்லும் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது. இந்த வழியாக வாகனங்கள் செல்லாதபடி போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+