கொடைக்கானலில் போதை காளானுக்கே டஃப் கொடுக்கும் குதிரை தாளி! வார்னிங் கொடுத்த அதிகாரிகள்
கொடைக்கானல்: தேசிய அளவில் பிரபலமான கோடை வாசஸ்தலமாக புகழ்பெற்ற இடங்களில் கொடைக்கானல் மிக முக்கியமான பகுதியாகும். இங்கு குதிரை தாளியை வைத்து, சிகிச்சை கொடுக்கப்படுவதாக சமீபத்தில் வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் ஷேரான நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள், குதிரை தாளியை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளாவிலிருந்தும் இதர மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். இங்கு போதை காளான்கள் பயன்பாட்டை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். இப்படி இருக்கையில் குதிரை தாளியை போதை பொருள் போல பயன்படுத்துவதாக பேச்சுகள் அடிப்பட்டிருந்தன. பலரும் இது குறித்து அச்சம் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

குதிரை தாளி ராஜு:
சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்ட அனைத்து வீடியோக்களிலும் ராஜு என்பவர் இடம் பெற்றிருந்தார். துணியில் எதையோ சுற்றி, அதை சுற்றுலாக்களுக்கு வரும் இளைஞர்களை நுகர சொல்கிறார். அவ்வளவுதான் அடுத்த சில நொடிகளுக்கு, இளைஞர்கள் தங்கள் சுயநினைவை இழக்கின்றனர். ராஜு துணியில் சுற்றி வைத்திருந்தது என்ன? என்பது பெரிய கேள்வியாக வெடித்தது. சிலர் இதை மிக மோசமான போதைப்பொருள் என்று கூட விமர்சித்திருந்தனர்.
சாதாரண மருந்துதாங்க:
ஆனால் குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் மறுத்த ராஜு, "இது சளி காய்ச்சலுக்கு கொடுக்கும் சாதாரண மருந்துதாங்க" என்று கூறியிருந்தார். மூக்கில் ஏறும் நெடி, அப்போதைக்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள முடியாதவாறு செய்துவிடும் என்பது உண்மைதான் என்றும், ஆனால் இந்த நிலை வெறும் 3-4 நொடிகள் மட்டுமே நீடிக்கும் என்பதால் ஆபத்து இல்லை என்றும் கூறுகிறார். கடந்த பல ஆண்டுகளாக சித்த வைத்தியம் செய்து வருவதாக கூறும் ராஜு, குதிரை தாளியை பெங்களூரிலிருந்து கொண்டுவரப்பட்டு இங்க நட்டு வைத்து வளர்த்தது நான்தான் என்றும் கூறியுள்ளார்.
சர்ச்சை வீடியோவும், போலீஸ் ரெய்டும்:
சுற்றுலா பயணிகளிடமிருந்து குதிரை தாளி சிகிச்சைக்கு ரூ.600 முதல் ரூ.3000 வரை ராஜு கட்டணம் வசூலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள், ராஜுவிடம் குதிரை தாளியை நுகர்ந்து பார்த்தனர். பின்னர் வேறு யாருக்கும் இதை கொடுத்துவிட வேண்டாம் என்று அறிவுறுத்தினர். இதனையடுத்து போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திய அதிகாரிகள்,
"கொடைக்கானல் சுற்றுலா தலத்திற்கு மிகவும் பேமஸான இடம். ஆனால் சிலர் இங்கு போதைக்காகவே வந்து செல்கின்றனர். இது சுற்றுலா கிராமங்களின் தன்மையை அடியோடு மாற்றிவிடுகிறது. போதையில்லாத குடும்பம்தான் வாழ்வில் சிறந்து விளங்கும். எனவே போதை பொருட்களின் விற்பனையை நீங்கள் நினைத்தால் தடுக்க முடியும். போதை விற்பனையை ஊக்குவிக்க வேண்டாம். அதே நேரம், நீங்களும் அதில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்" என கூறியுள்ளனர்.
போதை காளான்கள்:
கொடைக்கானலை பொறுத்தவரை முக்கியமான போதை பொருளாக போதை காளான் இருக்கிறது. இதை எடுத்துக்கொள்ளும் போது அப்போதைக்கு போதை தருவதாக இருந்தாலும் கூட, நீண்ட நாள் நோய் பாதிப்பை ஏற்படுத்தும். வன்முறை, நோய் பரவல் உள்ளிட்டவற்றிக்கு முக்கிய காரணியாக இது இருக்கிறது. இளைஞர்கள் இதை உட்கொள்ளும்போது ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் தடைபடுகின்றன. எனவே அவர்களின் முழு திறனையும் வெளிப்படுத்த முடியாமல் போய்விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications