கொடைக்கானல் போறீங்களா? சுங்கக்கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு.. முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் கொடைக்கானல் நகராட்சி எல்லைக்குள் நுழையும் அனைத்து வகை வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் அமைந்துள்ளது. சர்வதேச அளவில் கொடைக்கானல் புகழ்பெற்றுள்ளது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஏராளமான கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர்.

kodaikana toll fee

கொடைக்கானல் குளிருக்கு பெயர் பெற்றது. இதனால் விடுமுறை நாட்களில் அதிகமான மக்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் நகராட்சி சார்பில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது சுங்கக்கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பேருந்துக்கான சுங்கக்கட்டணம் ரூ.250ல் இருந்து ரூ.300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்களுக்கான சுங்க கட்டணம் ரூ.100ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வேன்களுக்கான சுங்ககட்டணம் ரூ.80 ஆக இருந்து ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஜீப், கார் உள்ளிட்டவற்றுக்கான சுங்கக்கட்டணம் ரூ.60ல் இருந்து ரூ.80 ஆக உயர்ந்துள்ளது.

நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் சுங்க கட்டணத்தை உயர்த்தி கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. கொடைக்கானல் நகராட்சியில் ஒவ்வொரு 3 ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 2026ம் ஆண்டில் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+