அவர் நம்பர் 3.. இவர் நம்பர் 2.. நம்பர் 1 யார் தெரியுமா? அதிமுகவினருக்கு ரேங்க் போட்ட ஸ்டாலின்!

அதிமுகவில் இருக்கும் அமைச்சர்கள் எல்லோருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் ரேங்க் கார்ட் கொடுத்து திண்டுக்கல்லில் பிரச்சாரம் செய்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: அதிமுகவில் இருக்கும் அமைச்சர்கள் எல்லோருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் ரேங்க் கார்ட் கொடுத்து திண்டுக்கல்லில் பிரச்சாரம் செய்துள்ளார்.

தமிழக தேர்தல் களம் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

இன்று திண்டுக்கல்லில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். திமுக வேட்பாளர்கள் திண்டுக்கல் வேலுச்சாமி, நிலக்கோட்டை சவுந்தரபாண்டியனை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

ஸ்டாலின் பிரச்சாரம்

ஸ்டாலின் பிரச்சாரம்

ஸ்டாலின் தனது பேச்சில், திண்டுக்கல்லில்தான் நான் அதிகமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். ஜெயலலிதா நன்றாக இருப்பதாக பொய் கூறியவர் இந்த ஊரை சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன். அம்மா இட்லி சாப்பிட்டார், ஜூஸ் குடித்தார் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். ஆனால் கடைசியில் எல்லாம் பொய் என்று ஒப்புக்கொண்டார்.

ஜெயலலிதா ஸ்லோ பாய்சன்

ஜெயலலிதா ஸ்லோ பாய்சன்

ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்று விட்டார்கள் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து மாறி மாறி பேசியவர்தான் திண்டுக்கல் சீனிவாசன். அவர் ஒரு பெரிய விஞ்ஞானி. திண்டுக்கலின் காமெடியன்தான் திண்டுக்கல் சீனிவாசன்.

திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் சீனிவாசன் இந்த ஊரை மொத்தமாக அவமானப்படுத்திவிட்டார். சீனிவாசன் எப்பவுமே இப்படித்தானா? இல்லை இப்படித்தான் எப்பவுமேவா?. மக்கள் பிளாஸ்டிக் பையை பயன்படுத்துவதால் வெள்ளம் வருவதாக திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

மோடியின் பேரன் ராகுல் காந்தி

மோடியின் பேரன் ராகுல் காந்தி

மோடியின் பேரன் ராகுல் காந்தி என்று கூட திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் திருடிவிட்டதாக கூறியவர்தான் திண்டுக்கல் சீனிவாசன். எடப்பாடி அமைச்சரவையில் எல்லோருமே இப்படித்தான். அதில் நம்பர் 1 திண்டுக்கல் சீனிவாசன். நம்பர் 2 செல்லூர் ராஜு. நம்பர் 2 ராஜேந்திர பாலாஜி. இவர்கள் மூன்று சிறந்த காமெடியன்கள்.

ரேங்க்

ரேங்க்

இன்னொரு ஊழல்வாதிகளின் லிஸ்ட் இருக்கிறது. அதிமுகவில் அதிகம் ஊழல் செய்வது வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர். அதில் நம்பர் 1 ஊழல்வாதி வேலுமணி. ஆனால் முதல்வர் எடப்பாடி இரண்டு லிஸ்டிலும் வருவார். அவர் காமெடியான ஊழல்வாதி. அவர் இந்த இரண்டு லிஸ்டிலும் முதலில் வரக்கூடியவர். அந்த கட்சியில் இருக்கும் எல்லோருமே இப்படித்தான், என்று ஸ்டாலின் பிரச்சாரத்தில் பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+