பிள்ளையார் பால் குடிப்பது மாதிரி.. விஜய் ஆட்சியை கவிழ்க்கும் காங்கிரஸ்? ஒரே போடாகப் போட்ட மாணிக்கம்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தமிழ்நாடு முழுவதும் 70,000 புத்தகங்களில் மோசடி நடந்துள்ள நிலையில், எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதியிடம் ஊழல் தடுப்புத்துறை விசாரிக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் உள்ள நூலகங்களில் நடந்துள்ள ஊழலை மறைக்கவே திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முயற்சிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் இயக்க மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, மண்டல ஒருங்கிணைப்பாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் திண்டுக்கல்லில் உள்ள தரகுமண்டி குமாஸ்தா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

Manickam Tagore Vijay Udhayanidhi Stalin

திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த முகாமில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணிக்கம் தாகூர்

முன்னதாக தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம கொண்டு வரப்பட்டாலும் அது தோற்கடிக்கப்படும். மக்களைப் பொறுத்தவரை விஜய் அவர்கள் இருப்பதாகவும், மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி என்ற மிக முக்கியமான விஷயம் உள்ளது. ​தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய நூலக ஊழல் நடைபெற்றுள்ளது. சுமார் 70,674 போலி புத்தகங்களை வைத்து ஒரு கம்பெனி காசு வசூல் செய்துள்ளது.

போலி புத்தகங்கள்

​திண்டுக்கல்லில் மட்டும் 2,207 போலி புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 'அகல்விளக்கு' மற்றும் 'பீனிக்ஸ் பப்ளிகேஷன் ஹவுஸ்' ஆகிய நிறுவனங்கள் இதனை வெளியே கொடுத்து வருகின்றன. இந்த மாபெரும் ஊழலை மறைப்பதற்காகத்தான் திமுக மடைமாற்றும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மிகப் பெரிய படித்த அறிஞர். ஊருக்கு ஊர் நூலகம் திறக்க வேண்டும், மக்கள் நூல்களை வாங்கிக் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நூலகங்களை வளர்த்தவர்.

உதயநிதி ஸ்டாலின்

ஆனால், இன்று முன்னாள் முதலமைச்சர் திரும்பி வந்து பார்த்தால் கட்சியைக் காணோம், எதிர்க்கட்சி தலைவர் மிஸ்ஸிங் என்ற நிலைதான் உள்ளது. அந்த கட்சியில் உள்ள உதயநிதி போன்றவர்கள் இந்த நூலக ஊழல் பிரச்சனையில் சிக்கப் போகிறார்கள். இதுவரை 70,000 போலி புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு புத்தகம் 1000 ரூபாய் என்று கணக்கிட்டால் எவ்வளவு பெரிய மோசடி நடந்திருக்கும் என்பதை அறியலாம்.
​இந்த ஊழலுக்கெல்லாம் உதயநிதி பதில் சொல்ல வேண்டும்.

ஊழல் தடுப்புத்துறை

அவருக்கும் இந்த நூலக ஊழலுக்கும் என்ன சம்பந்தம் என்பதை ஊழல் தடுப்புத்துறை விசாரிக்க வேண்டும். இதை மடைமாற்றுவதற்கான முயற்சிகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ​காவல்துறையும், ஊழல் தடுப்புத்துறையும் சிறப்புத் திட்டங்களை நடத்தும் துறை அமைச்சராக இருந்த உதயநிதியிடம், இந்த ஊழலுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு குறித்து கட்டாயம் விசாரணை நடத்த வேண்டும்.

சட்டம் ஒழுங்கு

​தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளின் அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்த ஒப்பீட்டுத் தரவுகளை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், காவல் துறை கண்காணிப்பாளரும் அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும். ​தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த 56 கொலைகளையும், இந்த ஆண்டு அது குறைந்துள்ளதையும் ஒப்பிட்டு தரவுகளை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் விஜய்

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திடம் ஏற்கனவே பழைய தகவல்கள் உள்ளதால், உண்மையான தரவுகளை வைத்து மட்டுமே நிலவரத்தை மதிப்பிட முடியும். இந்தியா முழுவதும் ஏதோ ஒரு இடத்தில் குற்றச் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதிகப்படியான கொலைகள் நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கும் விஷயமாக இருந்தாலும், அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. காவல்துறைக்குத் தேவையான அதிகாரங்களை வழங்குவதுடன், நேர்மையான அதிகாரிகளை பணியமர்த்துவதற்கான முழு முயற்சிகளையும் முதலமைச்சர் விஜய் மேற்கொண்டு வருகிறார்.

ராம் மாதவ்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகியும், அதன் செய்தித் தொடர்பாளராகவும், காஷ்மீர் பொறுப்பாளராகவும் பல்வேறு பதவிகளை வகித்தவர் ராம் மாதவ். அவர் தற்போது தமிழக பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை உருவாக்கி, தமிழகத்தை மத ரீதியாகப் பிரிக்க வேண்டும் என்ற 'அஜெண்டாவுடன்' அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தமிழகத்தைப் பிரிக்கும் இந்தச் சதித்திட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக துணை போகிறது.

எடப்பாடி பழனிசாமி

இதனால்தான் மக்களிடம் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை குறைந்து, அவர்களுடன் இருப்பவர்களே அவரை விட்டு ஒதுங்கிச் செல்கிறார்கள். அதிமுக எதற்காக நிறுவப்பட்டதோ அந்த அடிப்படை நிலையில் இருந்து கட்சி மாறிவிட்டதாலேயே திண்டுக்கல் சீனிவாசன் போன்ற மூத்த தலைவர்கள் தோல்வியைத் தழுவுகின்றனர். ஆர்.எஸ்.எஸ்ஸின் சதித்திட்டங்களை காங்கிரஸ் கட்சி உறுதியாக முறியடிக்கும். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கும், ராகுல் காந்திக்கும் இடையே 2009-ஆம் ஆண்டு முதல் சகோதரத்துவ உறவு தொடர்ந்து வருகிறது.

காங்கிரஸ் கட்சி

அவர் தனிக்கட்சி தொடங்கியிருந்தாலும், கரூர் விவகாரம் உள்ளிட்ட எவ்விதப் பிரச்சனையைச் சந்தித்தபோதும் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் தான் முதலில் அவருக்குத் தொடர்புகொண்டு ஆதரவாக நின்றன. மக்கள் மன்றத்தில் அவர் 106 இடங்களில் வென்ற பிறகு, சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத சூழலிலும் காங்கிரஸ் கட்சியே முதலில் அவருக்கு ஆதரவு அளித்தது. எனவே, எப்போதுமே விஜய்யுடன் காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.​ பிள்ளையாருக்குப் பால் குடிக்க வைப்பது போன்ற வீண் புரளிகளைக் கிளப்புவதையே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பல காலமாகச் செய்து வருகிறது." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+