Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொள்கையை விட்டுக் கொடுத்தால் தான் நிதியா? போராடியாவது பெறுவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் பளீர்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: ஒன்றிய அரசு தங்களுடைய சித்தாந்தத்தை எந்த வகையிலாவது உள்ளே கொண்டு வர வேண்டும் என்று கருதிதான் தேசிய கல்விக் கொள்கையை திணிக்கிறது எனவும், எங்களுடைய கொள்கையை விட்டுக் கொடுத்து நிதியை பெற வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை.. கொள்கை என்று வந்தால் எந்த ஒரு நிபந்தனைகளுக்கும் நாங்கள் ஒத்துக் கொடுக்க மாட்டோம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," jabel என்ற எலக்ட்ரிக்கல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ரூபாய் 2000 கோடியில் அமையவிருக்கிறது. இதன் மூலம் 5,000 மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது அதிகப்படியான பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு இதில் கிடைக்கும்.

anbil mahesh department of school education central govt

இதுவரை ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த எலக்ட்ரிக்கல் தொழிற்சாலை திருச்சியில் வருவதால் திண்டுக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்களும் அதிகம் பயன்பெறுவார்கள்.

உலகில் நான்காவது இடத்தில் உள்ள Jabel என்ற தொழிற்சாலை ஆப்பிள்,HCL உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு பொருட்கள் தயாரிக்க கூடிய நிறுவனமாக உள்ளது. மார்ச் 2026 ஆம் ஆண்டு இந்த தொழிற்சாலை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் பணம் கொடுப்பேன் என்று மத்திய அமைச்சர் கூறுவது எந்த வகையிலையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எங்களுடைய கொள்கையை விட்டுக் கொடுத்து நிதியை பெற வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை. கொள்கை என்று வந்தால் எந்த ஒரு நிபந்தனைகளுக்கும் நாங்கள் ஒத்துக் கொடுக்க மாட்டோம்.
ஒன்றிய அரசு தங்களுடைய சித்தாந்தத்தை எந்த வகையிலாவது உள்ளே கொண்டு வர வேண்டும் என்று கருதிதான் தேசிய கல்விக் கொள்கையை திணிக்கிறது. நிதியை நிறுத்துவதால் 15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையை மத்திய அரசு ஏற்படுத்துகிறது.

பல்வேறு விதமான துறைகளைச் சார்ந்த மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த புத்தகங்களும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. சிறந்த ஒருங்கிணைந்த கல்வியை தருவதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. இந்த கல்வியை ஏற்கனவே தமிழ்நாடு அரசு கொடுத்து வருகிறது. பல்வேறு விதமான திட்டங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

ஒன்றிய அமைச்சர் ஏதோ ஒரு நிர்பந்தத்தால் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று தள்ளப்படுகிறார். நிதி கேட்கும் விஷயத்தையும் மகாவிஷ்ணு விஷயத்தையும் ஒன்றாக பார்க்க கூடாது. ஆசிரியர்கள் போராட்டத்தில் என்னென்ன கோரிக்கைகள் வைக்கிறார்கள் என்று பார்த்து முடிவு செய்யப்படும். மகாவிஷ்ணு விஷயத்தை தொடர்ந்து விரிவான guide line ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு சம்பந்தமாக முழுமையான விசாரணை முடிந்த பிறகு அறிக்கை தாக்கல் செய்து அது குறித்து முடிவு செய்யப்படும்.

மூடநம்பிக்கையை கொண்டு பேசி இருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அறிவு சார்ந்த விஷயங்களை பள்ளிக்கல்வித்துறை கொண்டு செல்லும் பொழுது இது போன்ற மூடநம்பிக்கைகளை திணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மதம் சார்ந்து கல்விக்குள் எந்த விஷயமும் கலக்கக்கூடாது . அரசு உதவி பெறும் பள்ளி , தனியார் பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+