திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு சமையல் சிலிண்டர் விலை ரூ.4,500 முதல் ரூ. 5,000 வரை விற்கப்படுகிறது.. உளறிய அமைச்சர்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நாலாயிரத்து ஐநூறு முதல் ஐந்தாயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் ஆனால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் விலை இலவசமாக தரப்போவதாகவும் உளறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கட்சியினரும் தற்போது சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர்நகர்,லைன் தெரு. செல்லாண்டியம்மன் கோவில் தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்,

minister dindigul seenivasan speech viral in social media

அவர் பொதுமக்களிடம் பேசும்பொழுது தற்போது தாய்மார்களுக்கு தெரியும் சிலிண்டர் விலை என்ன என்று? ஒரு சிலிண்டரின் விலை 4500 முதல் ஐந்தாயிரம் வரை விலை கொடுத்து வாங்கப்படுகிறது. ஆனால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் விலை இலவசமாக தரப்படும் என்றார்.

முன்னதாக ஸ்டவ் அடுப்புக்கு டீசல் தேவையில்லை என்றும் கூறினார் இதை பார்த்த சுற்றி இருந்த பொதுமக்கள் நமது அமைச்சர் மீண்டும் உளற தொடங்கி விட்டார் என்று கூறி சிரித்தபடி சென்றார்கள்.

இதனிடையே இன்று திண்டுக்கல்லில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்கும் போது திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒண்ணாவது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியையும் செய்து தராததால் தாங்கள் வாக்கு சேகரிக்க வரக்கூடாது என கூறி அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

English summary
minister dindigul seenivasan loose talk that The price of a cooking cylinder ranges from Rs. 4,500 to Rs. Up to 5,000 are sold: say
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X