தலைவர் பதவிக்கு சம்பளம் கிடையாது! அது சும்மா கவுரவப் பொறுப்பு தான்! அமைச்சர் ஐ.பி.விளக்கம்!
திண்டுக்கல்: கூட்டுறவு சங்கங்களில் தலைவர் பதவி என்பது கவுரவப் பொறுப்பு மட்டுமே என்றும் அதற்கு சம்பளம் கிடையாது எனவும் அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உண்மை அறியாமல் அறிக்கை விடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் முத்தழகுபட்டியில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது;

கூட்டுறவு சங்கம்
''கூட்டுறவு சங்கங்களில் காசோலை வழங்குகின்ற அதிகாரத்தை தலைவரிடம் இருந்து பறித்துவிட்டதாக எதிர்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். கூட்டுறவு சங்கங்களின் விதிகளின் படியும் அதன் துணை விதிகளின் படியும் அன்றாட பணிகளை அன்றாட செயல்பாட்டினை காசோலையில் கையெழுத்து போடுகின்ற முழு அதிகாரமும் செயலாளருக்கு தான் உள்ளது.''

சம்பளம் கிடையாது
''ஒரு சில சங்கங்களில் செயலரும் அவருக்கு அடுத்த பதவியில் உள்ள அரசு சம்பளம் வாங்கக்கூடியவரும் சேர்ந்து தான் கையெழுத்து போடுவார்கள். இதுதான் கூட்டுறவு சங்கத்தின் சட்டத்தில் உள்ள விதி ஆகும். ஓ பன்னீர்செல்வம் கூறுவது உண்மையல்ல. சட்டத்திற்கு உட்பட்டு தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. தலைவர் என்பது ஒரு கௌரவப் பதவியாகும் அவர்களுக்கு சம்பளம் கிடையாது. கூட்டுறவுத்துறை மாநில அரசின் பட்டியலில் முழுக்க முழுக்க உள்ளது.''

மாநில அரசின் அனுமதி
''உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட குழுவினர் முழு அதிகாரம் மாநில அரசுக்கு தான் உள்ளது என கூறியுள்ளனர். கூட்டுறவு துறையில் உள்ள தலைவரின் பதவி காலத்தை மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டு காலமாக மாற்ற வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் அனுமதியை மத்திய அரசு பெற வேண்டும் அல்லது பெரும்பான்மையான மாநில அரசுகளின் அனுமதியைப் பெற்று இருக்க வேண்டும்.''

கவுரவப் பொறுப்பு
''பதவிக் காலத்தை முடிவு செய்வது என்பது மாநில அரசுக்கு உட்பட்டது அது மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு சட்டம் கொண்டுவர அதிகாரம் இல்லை. கூட்டுறவு துறை மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டது. ஓ பன்னீர்செல்வம் கூறுவது உண்மைக்கு மாறானது. தலைவர் பொறுப்பு என்பது கவுரவ பொறுப்பு ஆகும். அதற்கு சம்பளம் கிடையாது சங்கத்தின் செயலாளர்க்கு தான் முழு அதிகாரம் உள்ளது.''
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications