பாஜகவுடன் கூட்டணி.. அடிமைத்தனம் தானே? எடப்பாடிக்கு 10 கேள்வி.. கிடுக்குப்பிடி போட்ட முக ஸ்டாலின்!
திண்டுக்கல்: தொகுதி மறுவரையறை மசோதாவை இந்தியா கூட்டணி முறியடித்ததை "வரலாற்று வெற்றி" எனக் குறிப்பிட்ட முதல்வர், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான 'சூப்பர் ஸ்டார்' திமுவின் தேர்தல் அறிக்கை தான் எனக் கூறினார். மேலும், திண்டுக்கல்லில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 10 கேள்விகளையும் எழுப்பினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்து வருகிறது. அதன்படி திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் இ.பெரியசாமி (ஆத்தூர்), அர.சக்கரபாணி (ஒட்டன்சத்திரம்,), இ.பெ.செந்தில்குமார் (திண்டுக்கல்); நாகஜோதி (நிலக்கோட்டை), சாமிநாதன் (வேடசந்தூர்), கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பாண்டி(பழனி), தமிழர் தேசம் கட்சி வேட்பாளர் செல்வக்குமார் (நத்தம்) ஆகியோரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வாக்கு கேட்டார்.
அப்போது முதல்வர் பேசுகையில்," பா.ஜனதாவின் வீழ்ச்சி வெற்றி செய்தியோடு வெடியை போட்டுவிட்டு தான் இங்கு வந்து இருக்கிறேன். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே தேசிய ஜனநாயக கூட்டணி மண்ணை கவ்வி இருக்கிறது. இது சாதாரண வெற்றி அல்ல. 100 ஆண்டுகள் கழித்தும் வரலாற்றில் நின்று பேசப்போகும் வெற்றி ஆகும். ஆணவ பாரதீய ஜனதாவின் வீழ்ச்சியை தமிழ்நாடு தொடங்கி வைத்துள்ளது. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று கூறினேன். இன்று தமிழ்நாடு வென்று இருக்கிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி 10 கேள்விகளை எழுப்பினார். அதில்," 1. திருவள்ளுவருக்குக் காவி அடிப்பது, மும்மொழிக் கொள்கை, தேசியக் கல்விக் கொள்கையில உங்க நிலைப்பாடு என்ன?
2. நீட் விலக்கு நிபந்தனையோடுதான் திமுக கூட்டணி வச்சிருந்தது. உங்களால ஏன் தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு தந்தால்தான் பாஜக கூட்டணியின்னு நிபந்தனை விதிக்க முடியல?
3. கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக FCRA சட்டத் திருத்தம் பற்றி உங்க நிலைப்பாடு என்ன?
4. ஒரு கற்பனைக்கு, NDA கூட்டணி வெற்றி பெறுதுன்னு வச்சுக்கிட்டா, தமிழ்நாட்டுல அதிமுக ஆட்சிதான் அமையும்னு பாஜக தலைவர்கள் உறுதி கொடுப்பாங்களா?
5. கட்டி முடிக்காத எய்ம்ஸ் தவிர்த்து உங்க ஓனர் பாஜக தமிழ்நாட்டிற்காகக் கடந்த 12 வருஷத்துல கொண்டு வந்த சிறப்புத் திட்டம் என்ன?
6. புதிய குற்றவியல் சட்டங்கள், விபிஎஸ்ஏ கல்விச் சட்டம், மகளிர் இடஒதுக்கீடு சட்டம், 100 நாள் வேலை உறுதி சட்டத்தை நீக்கிட்டு கொண்டு வந்திருக்கிற புதிய சட்டங்கள் - இதைப் பத்தி உங்களால பேச முடியுமா?
7. வக்ஃபு சட்டத்தைக் கைவிடச் சொல்லி பாஜக கிட்ட கேட்டீங்களா? அவங்க மதிச்சாங்களா?
8. தொகுதி மறுவரையறையில வாஜ்பாய் செஞ்ச மாதிரி 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க மோடிகிட்ட வற்புறுத்துனீங்களா?
9. தந்தை பெரியாரை உங்க பாஜக ஓனர் அவமதிக்கிறாங்களே, அதுக்கு உங்க பதில் என்ன?
10. 'திராவிடம்' என்பது போலிக் கொள்கைன்னு பாஜக சொல்றாங்க. உங்க கட்சிப் பெயர்ல திராவிடம் இருக்கு. அவங்களோட கூட்டணி வச்சிருக்கிறது அடிமைத்தனம் தானே?" என்றார்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications