நெஞ்சு வலியே வந்துரும் போல.. எங்கள் காதுகள் பாவமில்லையா? திண்டுக்கல்லை நடுங்க வைக்கும் வெடிச் சத்தம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்றும் இன்றும் தொடர்ந்து இருமுறை பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. வீடுகளில் கடும் அதிர்வும் உணரப்பட்ட நிலையில் கால்நடைகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தன. வெடிச்சத்தம் கேட்ட பின், சில நேரங்களில் பயிற்சி விமானங்கள் பறந்து செல்கின்றன. பல நேரங்களில் விமானங்கள் பறப்பது குறித்து அறிகுறி ஏதும் இருப்பதில்லை. இந்தாண்டில் மட்டும் வெடிச்சத்தம் கேட்பது இது 8-வது முறை, ஆனால் மாவட்ட நிர்வாகமோ இதுகுறித்து எந்த தகவல் சொல்லாமல் அமைதி காப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் மாவட்டங்களில் மலைகள் சூழ்ந்த மாவட்டமாக திண்டுக்கல் இருக்கிறது. விவசாயமே இங்கு பிரதானமாக உள்ளது. கொடைக்கானல், பழனி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களும், வேடசந்தூர் போன்ற தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளும் இருக்கிறது.

விவசாயத்திற்கு அடுத்தபடியாக கனிமவள தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டிருக்கின்றனர். நத்தம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு அரசு விதிமுறைகளை மீறி பல நூறு அடிகள் ஆழமாக தோன்றி கற்கள் உள்ளிட்டவை வெட்டி எடுக்கப்படுகிறது. அங்கெல்லாம் அடிக்கடி வெடி வைக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே திண்டுக்கல் மாவட்ட மக்கள் அச்சத்தில் தான் இருக்கின்றனர். காரணம் திடீர் திடீரென போர் விமானங்கள் சுற்றி வருவது, அதிபயங்கர சத்தத்துடன் வெடிச்சத்தம் கேட்பது என தொடர்கதையாகி வருகிறது. ஆனால் இந்த சத்தம் எதனால் வருகிறது என்ற விளக்கத்தை அதிகாரிகள் இதுவரை அளிக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் மிகப்பெரிய அளவிலான வெடிச்சத்தமும், அதிர்வும் ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மட்டும் எட்டு முறைக்கு மேல் அதிபயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது.
கடந்த மார்ச் 24ஆம் தேதியும் 25ஆம் தேதியும் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. சுமார் 20 நிமிட இடைவேளையில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், வடமதுரை உள்ளிட்ட பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டது. தொடர்ந்து ஒரு மாதம் நிம்மதியாக இருந்த நிலையில் நேற்று இன்றும் மீண்டும் அதி பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் வானில் விமானங்கள் பறப்பது போன்ற சத்தமும் கேட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த வெடிச்சத்தமும் நில அதிர்வு உணரப்பட்டது. சில இடங்களில் வீடுகளில் அதிர்வு ஏற்பட்டதாக கூறுகின்றனர் பொதுமக்கள்.
திடீர் திடீரென கேட்கும் வெடிச்சத்தத்தால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், இதய நோயாளிகள் பெரும் அச்சமடைகின்றனர். படக்கென ஒருவித அச்ச மனநிலை உருவாகிறது. இது தொடர்பாக ஊடகங்களில் பலமுறை செய்திகள் வெளியாகியும் இதுவரை அதிகாரிகள் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர்கள் தொடங்கி மாவட்ட ஆட்சியர், எம்பி, எம்எல்ஏக்கள், மேயர் என திண்டுக்கல்லில் தான் அனைவரும் இருக்கிறார்கள். ஆனால் ஒருவர் கூட இந்த சத்தத்தை கேட்கவில்லையா அல்லது கேட்டும் பதில் சொல்லாமல் இருக்கிறார்களா என தெரியவில்லை. ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு விதிமுறைகளை மீறி பள்ளம் தோண்டி பாறைகள் வெடிவைத்து வெட்டி எடுக்கப்படுகிறது. இதனால் அதிர்வு ஏற்படுவதாகவும் ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர்.
அதே நேரத்தில் கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து விமானங்கள் திண்டுக்கல் பகுதிகளில் அடிக்கடி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. திடீரென விமானத்தின் வேகத்தை அதிகரிக்கும் போது சோனிக் பூம் என்ற நிகழ்வு ஏற்படும். அதனால் ஏற்படும் சத்தமா என்ற குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் அதிகாரிகள் ஒரு விளக்கத்தை அளித்தால் மக்களாவது நிம்மதியாக இருப்பார்கள்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications